கோத்தகிரி தாசில்தார் அலுவலக வளாகத்தில் விலங்குகளின் ரத்தம் படிந்த காலடி தடங்கள், பொதுமக்கள் பீதி
கோத்தகிரி தாசில்தார் அலுவலக வளாகத்தில் நேற்று விலங்குகளின் ரத்தம் படிந்த காலடி தடங்கள் காணப்பட்டன. இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பீதி அடைந்தனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ளது தாசில்தார் அலுவலகம். இந்த அலுவலக வளாகத்தின் தரை தளத்தில் கோர்ட்டும் செயல்பட்டு வருகிறது. இதன் அருகில் அரசு மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மார்க்கெட், தொலைபேசி நிலையம், அரசு கருவூலம் உள்ளிட்டவை உள்ளன.
இதன் காரணமாக எப்போதும் இந்த பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் காணப்படும். தாசில்தார் அலுவலக வளாகத்தில் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகிறது. இதனால் காட்டுப்பன்றிகள் மற்றும் தெரு நாய்கள் கூட்டம் இங்கு காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த புதர்செடிகளை வெட்டி அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இங்குள்ள மழைநீர் கால்வாய் மேல் போடப்பட்டுள்ள காங்கிரீட் மூடிகள் மீது நேற்று விலங்குகளின் ரத்தம் படிந்த காலடி தடங்கள் காணப்பட்டன. இதனால் நேற்று காலை தாசில்தார் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் பீதி அடைந்தனர்.
பின்னர் இதுகுறித்த தகவலின் பேரில் கோத்தகிரி வனச்சரகர் சீனிவாசன் உத்தரவின் படி வனகாப்பாளர்கள் முருகன், வினோத் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கால்தடங்களை ஆய்வு செய்தனர்.
இது குறித்து வனச்சரகர் சீனிவாசன் கூறியதாவது:-
ரத்தம் படிந்த காலடி தடங்கள் அனைத்தும் நாய்களுடைய கால்தடங்கள். இங்கு வசிக்கும் தெருநாய்களை பிடிக்க இரவில் சிறுத்தைப்புலி வந்திருக்கலாம். அதன் தாக்குதலில் காயம் அடைந்த தெருநாய்கள் தப்பி செல்லும்போது ரத்தம் படிந்த காலடி தடங்கள் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த பகுதி கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் சிறுத்தைப்புலி நடமாட்டம் பதிவாகியுள்ளதா? என ஆய்வு செய்து வருகிறோம். மேலும் இங்கு வனத்துறையினர் சில நாட்களுக்கு இரவு நேரத்திலும் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பொதுமக்கள் கூறும்போது, இந்த பகுதியில் 6-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் இருந்தன. இதில் தற்போது ஒரே ஒரு தெருநாய்தான் உள்ளது. எனவே சிறுத்தைப்புலி அந்த தெருநாய்களை கொன்று இருக்கலாம் என்று கூறினர்.