ராமாபுரம் ஏரிக்கரையில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றம்
ராமாபுரம் ஏரிக்கரையில் ஆக்கிரமித்து கட்டி இருந்த கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன.
பூந்தமல்லி,
சென்னை வளசரவாக்கம், ராமாபுரத்தில் பாரதி சாலை உள்ளது. இந்த சாலை நெசப்பாக்கம், கே.கே.நகர், எம்.ஜி.ஆர். நகரை இணைக்கும் முக்கிய சாலையாகும். இந்த சாலையையொட்டி தனியார் கல்லூரி இயங்கி வருவதால் காலை, மாலை நேரங்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலையை விரிவுப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக சாலையோரம் உள்ள கடைகள் மற்றும் வீடுகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் உரிமையாளர்கள், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
அதில் ராமாபுரம் ஏரிக்கரையை ஆக்கிரமித்துதான் அந்த வீடுகள் மற்றும் கடைகள் கட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது. ஏரிக்கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து வீடு, கடைகளை காலி செய்யும்படி அதன் உரிமையாளர்களுக்கு நெடுஞ்சாலை துறையினர் நோட்டீஸ் வழங்கினர்.
இந்தநிலையில் நேற்று பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் ஒன்று சேர்ந்து ராமாபுரம் ஏரிக்கரையை ஆக்கிரமித்து கட்டி இருந்த 54 கடைகள், 24 வீடுகளை பொக்லைன் எந்திரம் கொண்டு இடித்து அகற்றினார்கள்.
முன்னதாக ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அங்கு வசித்து வந்த பொதுமக்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த வளசரவாக்கம் போலீசார், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.