பேரணியாக செல்ல அனுமதி மறுத்து வாகனங்கள் பறிமுதல்: கொள்ளேகால் டவுன் போலீஸ் நிலையம் முற்றுகை
கொள்ளேகால் டவுன் போலீஸ் நிலையம் முற்றுகையிட்டு ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
கொள்ளேகால்,
பேரணியாக செல்ல அனுமதி மறுத்து வாகனங்களை பறிமுதல் செய்ததால், கொள்ளேகால் டவுன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகாலில் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் கலந்து கொள்ள முன்னாள் முதல்-மந்திரியும், அக்கட்சியின் மாநில தலைவருமான குமாரசாமி ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்தார். கொள்ளேகால் அருகே வீனாபுரா பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த ஹெலிபேடு தளத்தில் வந்து இறங்கிய அவர் அங்கிருந்து தொண்டர்களுடன் பொதுக்கூட்டம் நடந்த இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்றார்.
அவர்கள் கொள்ளேகால் டவுன் பகுதியில் வந்த போது அங்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீனாநாயக் தலைமையிலான போலீசார் மோட்டார் சைக்கிளில் பேரணியாக வந்தவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் மோட்டார் சைக்கிளில் பேரணியாக செல்ல அனுமதி பெறவில்லை. இதனால் மோட்டார் சைக்கிளில் பேரணியாக செல்ல கூடாது என்று போலீசார் கூறினார். ஆனால் இதனை மறுத்த ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பேரணியாக செல்ல முயன்றனர்.
இதனால் போலீசார் பேரணியாக வந்த ஜனதாதளம்(எஸ்) கட்சி தொண்டர்களின் 150 மோட்டார் சைக்கிள்கள், முன்னாள் மந்திரி விஸ்வநாத், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிக்கண்ணா, ஸ்ரீகண்டேகவுடா ஆகியோர் கார்களை பறிமுதல் செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தொண்டர்கள் அங்கிருந்து ஊர்வலமாக நடந்து சென்றனர். அப்போது திடீரென கொள்ளேகால் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீரென போராட்டம் நடத்தினர்.
இதுபற்றி அறிந்த கொள்ளேகால் உதவி கலெக்டர் பவுசியா தரணம் அங்கு வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்ற தொண்டர்கள், கொள்ளேகால் டவுன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு திடீரென போராட்டம் நடத்தினர். மேலும் போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
அப்போது போராட்டம் நடத்தியவர்களிடம் சப்-இன்ஸ்பெக்டர் வீனாநாயக் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்தர்ப்பத்தில் போராட்டம் நடத்தியவர்கள் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், கார்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
இதனை தொடர்ந்து அனுமதி இல்லாமல் இதுபோன்று பேரணியாக செல்ல கூடாது என்று கூறி எச்சரிக்கை விடுத்த வீனாநாயக், பறிமுதல் செய்த மோட்டார் சைக்கிள்கள், கார்களை விடுவித்தார். இதனை தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள், கார்களில் தொண்டர்கள் அங்கிருந்து சென்றனர். இந்த போராட்டத்தால் கொள்ளேகால் டவுன் போலீஸ் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.