காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி விழுப்புரத்தில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி விழுப்புரத்தில் அ.தி. மு.க.வினர் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினார் கள். இதில் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

Update: 2018-04-03 22:30 GMT
விழுப்புரம், 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நேற்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இந்த போராட்டத் திற்கு தெற்கு மாவட்ட அவைத் தலைவர் பச்சையாப் பிள்ளை தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் இரா. குமரகுரு எம்.எல்.ஏ., சக்கரபாணி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தை மாநில அமைப்பு செயலாளரும் தமிழக அமைச்சருமான சி.வி.சண்முகம் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றி னார்.

உண்ணாவிரத போராட் டத்தில் முன்னாள் அமைச்சர் மோகன், முன்னாள் மத்திய மந்திரி செஞ்சி ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. தாட்கோ கண்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பசுபதி, நகர செயலாளர்கள் பாஸ்கரன், சுப்பு, ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், பேட்டை முருகன், முத்தமிழ் செல்வன், சிந்தாமணி வேலு, ஏ.பி.பழனி, பழனிச்சாமி, மாவட்ட முன்னாள் துணை செயலாளர் அற்புதவேல், வளவனூர் நகர செயலாளர் சங்கரலிங்கம், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் நெடுஞ்செழியன், அவைத்தலைவர் துரைராஜ், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மாரங்கியூர் இளங்கோவன், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் சம்பத், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை தலைவர் வண்டிமேடு ராமதாஸ், முன்னாள் ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு, வக்கீல் செந்தில் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினார் கள். இந்த உண்ணாவிரத போராட்டம் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, ஊராட்சி, கிளை செயலாளர் கள், நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் என ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டின் ஜீவாதார மான காவிரி நதிநீருக்காக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததோடு சட்டப்பூர்வ நடவடிக்கை களையும் எடுத்தார். அவருக்கு பிறகு அ.தி.மு.க. அரசு இந்த பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு குரல் கொடுத்து வருகிறது. இப்பிரச்சினைக்காக பாராளு மன்றத்தை அ.தி.மு.க. எம்.பி.க்கள் முடக்கியுள்ளனர். தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 9-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று அறவழியில் நாங்கள் போராட்டம் நடத்தி வருகிறோம். காவிரி பிரச் சினைக்காக மு.க.ஸ்டாலின் ஒரு துரும்பை கூட போட வில்லை.

ஆனால் ரெயில் மறியல், பஸ் மறியல் என மு.க. ஸ்டாலின் நாடகமாடி வருகிறார். இன்று எங்களை பார்த்து ஏன் ராஜினாமா செய்யவில்லை என்று கேட்கும் தி.மு.க., அன்று ஏன் ராஜினாமா செய்யவில்லை? எங்களை விமர்சிக்கும் தகுதி தி.மு.க.விற்கு இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை எங்களின் அறவழிப்போராட்டம் ஓயாது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்