மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் 3-வது நாளாக போராட்டம்
மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலூர்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் 3-வது நாளாக நேற்று தேனி மாவட்டத்தில் 13 இடங்களில் போராட்டம் நடந்தது. தேனியில் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பெத்தாட்சி ஆசாத் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
போடி அருகே மீனாட்சிபுரத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு பேரூர் செயலாளர் குருசாமி தலைமை தாங்கினார். போடி முன்னாள் ஒன்றிய குழு தலைவர் செல்வன், பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைசெயலாளர் மயில்தாய் அன்புசெழியன் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன் கலந்து கொண்டு பேசினார். இதில் தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் கூடலூர் பழைய பஸ்நிலையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. நகர செயலாளர் லோகந்துரை தலைமை தாங்கினார். வக்கீல் சொக்கர் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., திராவிடர் கழகத்தினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது சாரல்மழை பெய்தது. மழையில் நனைந்தபடி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இதேபோல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி உப்புக்கோட்டையில் வியாபாரிகள், பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனர். கம்பம் ஏ.கே.ஜி. திடலில் தி.மு.க. நகர செயலாளர் சிங் செல்லப்பாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், மாநில தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் கம்பம் செல்வேந்திரன் மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர்.
தேனி ஒன்றிய தி.மு.க. செயலாளர் ரத்தின சபாபதி தலைமையில், வீரபாண்டியில் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். உத்தமபாளையத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் குமரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. காங்கிரஸ் வட்டார தலைவர் மைதீன் அப்துல்காதர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் சுருளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதேபோல் தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் பாஸ்கரன் தலைமையில் அந்த கட்சியினர் புறவழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்டதாக 23 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.