16 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்: கலெக்டர் லதா உத்தரவு

மாவட்டத்தில் பணிபுரியும் 16 வட்டார வளர்ச்சி அதிகாரிகளை வேறு இடங்களுக்கு மாறுதல் செய்து கலெக்டர் லதா உத்தரவிட்டுள்ளார்.

Update: 2018-04-03 22:15 GMT
சிவகங்கை,

சிவகங்கையில் கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த ஜஹாங்கீர், திருப்புவனம் கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலராக மாற்றப்பட்டுள்ளார்.

காளையார்கோவிலில் கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த அன்புத்துரை, இளையான்குடி கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலராக மாற்றப்பட்டார். ஏற்கனவே அங்கிருந்த அழகுமீனாள், அங்கேயே வட்டார வளர்ச்சி அலுவலராக மாற்றப்பட்டுள்ளார்.

தேவகோட்டையில் கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த இளங்கோ தாயுமானவன், காளையார்கோவில் கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலராக மாற்றப்பட்டார்.

சாக்கோட்டை கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த இளங்கோ, எஸ்.புதூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், திருப்பத்தூர் கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த உமா மகேஸ்வரி, தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலராகவும், ஏற்கனவே அங்கிருந்த திருப்பதிராஜன் அங்கேயே கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், கண்ணங்குடியில் கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த ஸ்ரீதர், சாக்கோட்டை கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

இதேபோல் மானாமதுரையில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த சந்திரா, திருப்பத்தூர் கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், திருப்பத்தூரில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த ஜோசப் அருள்ராஜ், சிவகங்கை கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், திருப்புவனத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த திருநாவுக்கரசு, கண்ணங்குடி கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், காளையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரஜினிதேவி, சிங்கம்புணரி கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் சிவகங்கையில் உள்ள உதவி இயக்குனர் தணிக்கை அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்த நசீராபேகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் தேசிய வேலை உறுதித்திட்ட வட்டார வளர்ச்சி அலுவலராகவும், ஏற்கனவே இங்கு பணிபுரிந்த ஆனந்தலட்சுமி, கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவில் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும், கல்லலில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த சரவணபவன், சாக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலராகவும், ஏற்கனவே இங்கிருந்த பிச்சை, கல்லல் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் மாற்றப்பட்டுள்ளனர். 

மேலும் செய்திகள்