தேர்தல் அதிகாரிகள் வராததை கண்டித்து கூட்டுறவு வங்கிக்கு பூட்டு போட்டு சாலை மறியல்
தேர்தல் அதிகாரிகள் வராததை கண்டித்து கந்தர்வகோட்டை அருகே உள்ள வடுகப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு பூட்டு போட்டு பல்வேறு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள வடுகப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த வாரம் கூட்டுறவு சங்க தேர்தலுக்காக வங்கியின் கீழ் செயல்படும் மங்கனூர், மெய்க்குடிப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை, வாண்டையான்பட்டி, வடுகப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த அனைத்து கட்சிகளையும் சேர்ந்த விவசாய கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
வேட்பு மனுக்களை பெற்று கொண்ட தேர்தல் அதிகாரி மனுதாக்கல் செய்த அனைவருக்கும் ஒப்புகை சீட்டு வழங்கி உள்ளார். இந்த நிலையில் நேற்று வேட்புமனு பரிசீலினை மற்றும் தேர்தல் குறித்த விவரங்களை பெறுவதற்கு அனைவரும் வங்கியின் முன்பு கூடி அதிகாரிகளுக்காக காத்து இருந்தனர். நீண்டநேரம் காத்திருந்தும் தேர்தல் அதிகாரிகள் வரவில்லை. இதைத்தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் வராததை கண்டித்து வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் பூட்டப்பட்டிருந்த வங்கியின் கதவில் இன்னொரு பூட்டை போட்டு பூட்டினார்கள்.
மேலும் வங்கியின் முன்பு முட்களை வைத்து அடைத்து வைத்தனர். தொடர்ந்து வங்கியின் முன்பு உள்ள கந்தர்வகோட்டை-செங்கிப்பட்டி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் அ.ம.மு.க.வினர் கலந்து கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர்மன்னன் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.