வருகிற 5-ந் தேதி முழு அடைப்பு போராட்டம்: தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆலோசனை

வருகிற 5-ந் தேதி நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டம் தொடர்பாக நாகர்கோவிலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் நேற்று ஆலோசனை நடத்தினர்.

Update: 2018-04-02 22:45 GMT
நாகர்கோவில்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் வருகிற 5-ந் தேதி தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முழு அடைப்பு போராட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகளும் பங்கேற்கின்றன.

இந்த நிலையில் முழு அடைப்பு போராட்டம் தொடர்பாக குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஆஸ்டின் எம்.எல்.ஏ, நகர செயலாளர் மகேஷ், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராதாகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் செல்லசாமி, தி.க. நிர்வாகி வெற்றிவேந்தன் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பஸ் இயங்காது

கூட்டத்தில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. பேசியபோது, ‘சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வருகிற 5-ந் தேதி முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும். இந்த போராட்டம் வெற்றி அடைய விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். போராட்டம் காரணமாக பஸ்கள் இயங்காது. எனவே பொதுமக்கள் சிரமத்தை தவிர்த்து போராட்டத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்‘ என்றார்.

அதன்பிறகு கூட்டத்தில், முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும். கூட்டுறவு சங்க தேர்தல் புகார் பற்றி இணைப்பதிவாளரை சந்தித்து முறையிட்டபோது ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் தற்போது 3 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். மேலும் எம்.எல்.ஏ.க்களுக்கு தொ டர்ந்து கொலை மிரட்டல் வருகிறது. இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்யப்பட்டுள் ளது. புகாரின் மீது வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. 

மேலும் செய்திகள்