காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சென்னையில் 12-ந் தேதி உண்ணாவிரதம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சென்னையில் 12-ந் தேதி உண்ணாவிரதம் இருப்பது என அனைத்து விவசாய சங்கங்களின் கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சி,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்தநிலையில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் மாநில தலைவர்கள் கலந்தாய்வு கூட்டம் திருச்சி ரெயில் நிலையம் அருகே ஒரு மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் விவசாய சங்கங்களின் தலைவர்கள் செல்லமுத்து, குருசாமி, விருத்தகிரி, நல்லசாமி, தெய்வசிகாமணி, விசுவநாதன், புலியூர் நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க கோரியும் இன்று (செவ்வாய்க்கிழமை) வணிகர்கள் நடத்தும் கடையடைப்பு போராட்டத்துக்கும், 5-ந்தேதி தி.மு.க. அறிவித்துள்ள முழுஅடைப்பு போராட்டத்துக்கும், 6-ந்தேதி ஜி.கே.வாசன் அறிவித்துள்ள போராட்டத்துக்கும், 11-ந்தேதி பா.ம.க. நடத்தும் போராட்டத்துக்கும் அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் ஆதரவையும், நன்றியையும் தெரிவித்து கொள்வது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து வருகிற 12-ந் தேதி மாணவர்கள், சினிமா துறையினர், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்களை ஒன்று திரட்டி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடத்துவது என்றும், பிரதமர் மோடி தமிழகம் வரும்போது, அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீடுகள் தோறும் கருப்பு கொடி ஏற்றுவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதுகுறித்து விவசாய சங்க தலைவர் செல்லமுத்து நிருபர்களிடம் கூறுகையில், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் மற்றும் அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து மாபெரும் பேரணி நடத்த உள்ளோம். இதற்கான தேதி குறித்து சென்னையில் 12-ந்தேதி நடைபெறவுள்ள உண்ணாவிரதத்தில் அறிவிப்போம்” என்றார்.