காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தி.மு.க.வினர் மறியல் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து அரியலூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 75 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறிய மத்திய அரசினை கண்டித்து அரியலூர் பஸ் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது. இதையொட்டி அரியலூர் நகர தி.மு.க. அலுவலகத்தில் இருந்து மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமையில், மாவட்ட அவைதலைவர் துரைராஜ், ஒன்றிய செயலாளர் ஜோதிவேல், நகர செயலாளர் முருகேசன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், குணா, மணிவண்ணன், முன்னாள் நகர்மன்ற தலைவி விஜயலட்சுமி உள்பட கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு அரியலூர் பஸ் நிலைய நுழைவு வாயிலுக்கு வந்தனர்.
மறியல்
பின்னர் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். அப்போது மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் பஸ்நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட 75 பேரை கைது செய்தனர். பின்னர் அப்பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.