காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2018-04-02 22:45 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட தி.மு.க. சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் மாதையன், துணை செயலாளர் லட்சுமி மாது, தலைமை செயற்குழு உறுப்பினர் முரளி, முன்னாள் நகராட்சி தலைவர் சிட்டி முருகேசன், நகர செயலாளர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும். காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவையும் உடனடியாக அமைக்க வேண்டும். காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமைகளை தமிழக அரசு நிலைநாட்ட வேண்டும். தமிழகத்தின் வாழ்வாதாரத்தையும், தமிழக விவசாயிகளின் நலனையும் காக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், சேட்டு, குமரவேல், சார்பு அமைப்பு மாவட்ட நிர்வாகிகள் டாக்டர் பிரபு ராஜசேகர், ராஜா, சந்திரமோகன், முத்துலட்சுமி, அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பொன்.மகேஸ்வரன் நன்றி கூறினார்.

காங்கிரஸ்

இதே போல தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு தலைமை தாங்கினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கே.எம்.சித்தையன், மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் வைரவன், மாவட்ட நிர்வாகிகள் கனகராஜ், வேடியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் செந்தில்குமார் வரவேற்று பேசினார்.

இதில் வட்டார தலைவர்கள் ஜனகராஜ், சரவணன், முனுசாமி, ராஜபிரகாஷ், பூபதிராஜா, சண்முகம், பொன் பிரகாஷ், காமராஜ் உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட ஊடக பிரிவு தலைவர் கவுதமன் நன்றி கூறினார்.

ஊத்தங்கரை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அனைத்துக்கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.செங்குட்டுவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் எக்கூர் செல்வம் (வடக்கு), சாமிநாதன் (தெற்கு), பொன் குணசேகரன் (மத்தூர்), நகர செயலாளர் பாபுசிவக்குமார், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் மாலதி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்க மாநில துணை செயலாளர் ஜெயலட்சுமி மற்றும் காங்கிரஸ், திராவிடர் கழகம், ம.தி.மு.க., மனித நேய மக்கள் கட்சி உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்