மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியல் 75 பேர் கைது

மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கும்பகோணத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 75 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-04-01 22:45 GMT
கும்பகோணம்,

சென்னையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டம் நடத்திய தி.மு..க. செயல்தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் உச்சிபிள்ளையார் கோவில் அருகே தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தி.மு.க மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், சாக்கோட்டை அன்பழகன் எம்.எல்.ஏ ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் திரளான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். அப்போது மு.க.ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

75 பேர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 75 பேரை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்