டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க திட்டமிட்ட 4 பேர் கைது
உத்திரமேரூரில் டாஸ் மாக் கடையில் கொள்ளையடிக்கவும், முக்கிய பிரமுகரை கொலை செய்யவும் திட்டமிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
உத்திரமேரூர்,
உத்திரமேரூர் பகுதியில் வீச்சரிவாள், உருட்டுக்கட்டை மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் சிலர் சுற்றி வருவதாக உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேசுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் போலீசார் மருதம் அருகே காட்டுப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 3 மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்கள் நிற்காமல் சென்றுவிட்டனர். அவர்களை போலீசார் விரட்டி பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். அவர்களை சோதனை செய்ததில் அவர்களிடம் வீச்சரிவாள், உருட்டுக்கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் 4 பேரையும் உத்திரமேரூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் உத்திரமேரூர் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன் (30), உத்திரமேரூர் கீழண்டை தெரு விக்னேஷ் (23), சின்ன காஞ்சீபுரம் ஈஸ்வரன் என்கிற ஈசா (19), மாகரல் காலனியை சேர்ந்த கவுதம் (19) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் தீவிரமாக விசாரித்ததில் உத்திரமேரூரில் ஒதுக்குப்புறமாக உள்ள டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்கவும், பிரபல நபர் ஒருவரை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து வீச்சரிவாள், உருட்டுக்கட்டை மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் அவர்கள் 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள், வீச்சரிவாள், உருட்டுக்கட்டை மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.