பெண் கண்டக்டர்களுக்கு பிரசவ சலுகை
பேருந்துகளில் கண்டக்டர்களாக வேலை செய்யும் பெண்களில் 25 சதவீதம் பேர் கர்ப்ப காலத்தில் கருச்சிதைவு பிரச்சினையை எதிர்கொள்வதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
பேருந்துகளில் கண்டக்டர்களாக வேலை செய்யும் பெண்களில் 25 சதவீதம் பேர் கர்ப்ப காலத்தில் கருச்சிதைவு பிரச்சினையை எதிர்கொள்வதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மேலும் கர்ப்பகாலத்தில் 43 சதவீத பெண்களுக்கு மட்டுமே ஓரிடத்தில் நிலையாக அமர்ந்து அலுவலக பணி செய்யும் வாய்ப்பு கிடைப்பதாகவும் தெரிவிக்கிறது.
இந்தநிலையில் மகாராஷ்டிர மாநில போக்குவரத்து கழகம் கர்ப்பிணி பெண் கண்டக்டர் களுக்கு பிரசவகால விடுப்பை மேலும் 3 மாதங்கள் நீட்டித்துள்ளது. நடைமுறையில் இருக்கும் 6 மாத கால விடுப்புடன் இந்த மூன்று மாத கால விடுப்பும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாளாக கணக்கிடப்பட உள்ளது. மேலும் கர்ப்ப காலத்தில் கண்டக்டர் பணியில் ஈடுபடும் பெண்கள் அலுவலக பணி மேற்கொள்வதற்கும் முன்னுரிமை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பெண் கண்டக்டர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
‘‘பேருந்தில் பெண்களுக்கான பணி எல்லா நேரத்திலும் சுமுகமாக இருப்பதில்லை. கர்ப் பிணியாக இருக்கும் பெண் கண்டக்டர்கள் கருச்சிதைவு பிரச்சினையையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. எங்களது பிரச்சினைகளை புரிந்து கொண்டு நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டுதலுக்குரியது’’ என்கிறார்கள், பெண் கண்டக்டர்கள்.
ஏற்கனவே பணியில் இருந்த கர்ப்பிணி பெண்களில் சிலர் கருச்சிதைவு பிரச்சினையை எதிர்கொண்டிருக்கிறார்கள். இதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநில போக்குவரத்து கழகத்தில் 1 லட்சம் பேர் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் 4,400 பேர் பெண்கள். பிரசவகால விடு முறையை 9 மாதங்கள் வழங்கியுள்ள முதல் மாநிலமாக மகாராஷ்டிரா விளங்குகிறது.