ஒரு முகம்.. பல குரல்..
குரல் ஒருவரது அடையாளம். பேசும்குரலைவைத்தே அவர் யார் என்று கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் பிரமிளாவிடம் அவரது குரலைவைத்து அடையாளம் காண முடியாது.
குரல் ஒருவரது அடையாளம். பேசும்குரலைவைத்தே அவர் யார் என்று கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் பிரமிளாவிடம் அவரது குரலைவைத்து அடையாளம் காண முடியாது. ஏன்என்றால் அவரால் ஒரே நேரத்தில் பல நடிகைகளுக்கு, அவர்களுக்கு ஏற்றாற்போல் ‘டப்பிங்’ குரல் கொடுக்க முடிகிறது. ஒவ்வொரு நடிகைக்கும்தக்கபடி வெவ்வேறு விதமாக அவர் குரல் கொடுக்கிறார். நடிகை ஸ்ரீதேவிக்கும் குரல் கொடுத்திருக் கிறார். லட்சுமிராய்க்காகவும், ஹூமாகுரோசிக்காகவும் குரல் கொடுத்திருக்கிறார். ஹாலிவுட், பாலிவுட் படத்திற்கும் விதவிதமாக குரல்கொடுக்க இவரால் முடிந்திருக்கிறது.
நூறுக்கு மேற்பட்ட சினிமாக் களுக்கும், ஐநூறுக்கும் அதிகமான தொடர்களுக்கும் பின்னணி குரல் கொடுத்திருக்கும், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டான இவரது உண்மையான குரலை கண்டு பிடிக்க இவரிடம் வெகு நேரம் பேச வேண்டியதிருக்கிறது.
‘சரி.. நீங்கள் பிரபல நடிகை ஒருவருக்காக டப்பிங் பேசும்போது அவரது இயல்புகளை எல்லாம் எப்படி உள்வாங்கிக்கொண்டு அவருக்காக பேசுவீர்கள்?’
“நான் எந்த நடிகைக்காக டப்பிங் வாய்ஸ் கொடுக்கவேண்டுமோ, அந்த நடிகையின் பாடி லாங்வேஜை கூர்ந்து கவனிப்பேன். அவர் பேசும் விதத்தையும், அப்போது அவரது உடலில் ஏற்படும் சலனங்களையும் உள்வாங்கிக்கொள்வேன். அவர் நடந்து போகும் ஸ்டைல், உடல் அசைவுகளை வெளிப் படுத்தும் விதம், அவரது மேனரிசம் போன்ற பல விஷயங்களையும் பார்த்து விட்டு அதற்கு ஏற்றபடி அவருக்கான குரலை உருவாக்குவேன். அந்த குரல், திரையில் காட்சியோடு பொருந்தி வந்து ரசிகர்களை ஈர்க்கவேண்டும். எந்த நடிகைக்காக கொடுக்கிறேனோ அந்த நடிகை கேட்கும்போது அவரும் சந்தோஷப்பட்டு என்னை பாராட்டவேண்டும். இத்தனைக்கும் மேலாக அந்த படத்தின் டைரக்டருக்கும் குரல் பிடிக்கவேண்டும். இப்படி பல விஷயங்களை கவனித்து ஒவ்வொரு நடிகைக்கும் ஒரு தனித்துவமான குரலை தேர்ந் தெடுத்து பேசுவேன்.
குரலை தேர்ந்தெடுத்து பேசினால் மட்டும் போதாது. திரையில் தோன்றும் அந்த நடிகை உணர்ச்சிவசப்படும்போது அவரைப் போன்று நானும் உணர்ச்சிகளை கொட்டினால்தான் என் வார்த்தைகள் உணர்ச்சிப் பிழம்பாக இருக்கும். நடிகை அழுதுகொண்டே வசனம் பேசும்போது நானும் அழுதாக வேண்டும். நடிகைகள் கேமிராவுக்கு முன்னால் அழுதுகொண்டு நடிப்பார்கள். நாங்கள் கேமிராவுக்கு பின்னால் அழுதுகொண்டு பேசவேண்டும். அதனால் டப்பிங் கலைஞர்களான நாங்கள் எளிதில் உணர்ச்சிவசப்பட்டுவிடுவோம்”
‘நடிகைகள் கிளிசரின் போன்றவைகளை பயன்படுத்தி அழுவார்கள். நீங்கள் டப்பிங் பேசும்போது உட்கார்ந்த இடத்திலேயே, உடனே உங்களை எப்படி அழுதுகொண்டே பேசும் சோக நிலைக்கு தயார்ப்படுத்துவீர்கள்?’
“நான் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள். அதனால் கஷ்டங்களை அனுபவித்திருக்கிறேன். அதுபோல் தினமும் எத்தனையோ பேர் சாலைகளில் கஷ்டப்படுவதையும் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்தாலும், அவர்களது கஷ்டத்தை எனக்கு ஏற்பட்டதுபோல் உணருவேன். எனக்கு நன்றாக ஓவியங்கள் வரையத் தெரியும். வரைவதற்காகவும், சாலைகளில் பார்க்கும் காட்சிகளை அப்படியே மனதில் பதியவைத்துக்கொள்வேன். அப்படி நான் மனதில் பதியவைத்திருக்கும் சோக காட்சிகளில் மனதை பிழிவதை மனக் கண் முன்னே கொண்டு வரும்போது என்னை மறந்து அழுதுவிடுவேன். அந்த அழுகையோடு உருக்கமாக டப்பிங் பேசுவேன். அது கேட்பவர்களை நெகிழவைத்துவிடும். நடிகை மவுனிகாவுக்கு அழும் காட்சியில் குரல் கொடுத்தபோது அதிகமாக அழுது என் கண்கள் வீங்கி சிவந்து விட்டன. அடுத்து உடனே இன்னொரு தொடருக்காக நான் டப்பிங் பேச செல்லவேண்டியிருந்தது. என் நிலையை பார்த்த நடிகை ஸ்ரீபிரியா அவரது காரில் என்னை ஏற்றிக்கொண்டு போய் அந்த ஸ்டூடியோவில் விட்டுவிட்டு வந்தார்.
காமெடியிலும் ஒரு கலக்கு கலக்கிவிடுவேன். காதல் காட்சி களுக்கு டப்பிங் பேசும்போது நாங்களும் காதல்வசப்படவேண்டும். திரையில் தோன்றும் நடிகரை காதலராக நினைத்துக்கொண்டு, நடிகையின் மனதுக்குள் புகுந்து வார்த்தைகளில் காதலை வெளிப் படுத்தவேண்டும். காதல், சோகம், சிரிப்பு போன்ற அனைத்து உணர்ச்சிகளையும் என்னால் உடனுக்குடன் வார்த்தைகளில் கொண்டுவர முடியும். அதையே மேடையிலும் நிகழ்ச்சியாக நடத்தி ரசிகர்களை கவர்கிறேன்..”
‘டப்பிங் துறையில் உங்களுக்கு கிடைத்திருக்கும் மறக்க முடியாத பாராட்டுகள்?’
“அது ஒரு கனா காலம் படத்தில் நடிகை பிரியா மணிக்காக டப்பிங் பேசினேன். என் குரல், அந்த நடிகையின் குரலோடு பொருந்திப்போனதாக கூறி டைரக்டர் பாலு மகேந்திரா அவரது கைப்பட பாராட்டு கடிதம் எழுதி அனுப்பினார். டைரக்டர் கே.பாலசந்தரின் ‘பொய்’ சினிமாவில் நடிகை விமலா ராமனுக்காக குரல் கொடுத்தேன். அவரும் பாராட்டினார். டைரக்டர் பாரதி ராஜாவின் தெற்கத்திப் பொண்ணு தொடரில் ஐந்து நடிகைகளுக்கு வெவ்வேறு மாதிரி நானே குரல்கொடுத்து பாராட்டு பெற்றேன். சிறந்த டப்பிங் கலைஞருக்கான தமிழக அரசு விருதும் கிடைத் திருக்கிறது. வேறு சில விருதுகளும் பெற்றிருக்கிறேன்..”
‘எப்படி நீங்கள் இந்த துறைக்கு வந்தீர்கள்?’
“எனது பெற்றோர் தேவராஜ்- மேனகா. நான் கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயலில் பிறந்தேன். அப்பா ராணுவத்தில் பணியாற்றியதால் நாங்கள் நாட்டின் பல பகுதிகளில் வசித்திருக்கிறோம். பெற்றோர் இருவருமே நன்றாக பாடுவார்கள். அப்பா நன்றாக ஓவியமும் வரைவார். அவர் வரைந்த நேருஜி ஓவியம் இப்போதும் டெல்லியில் உள்ள ராணுவ தலைமையகத்தில் உள்ளது. என் அம்மா சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது, அவரது பாடலைக் கேட்ட பிரபல இசை நடிகர் தியாகராஜ பாகவதர், என் தாத்தாவிடம் ‘சென்னைக்கு குடிபெயர்ந்து வாருங்கள். உங்கள் மகளுக்கு இசைத்துறையில் நல்ல எதிர்காலம் இருக்கிறது’ என்று கூறியிருக்கிறார். என் தாத்தா அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டார்.
அப்பாவுக்கு ராணுவத்தில் பணிமாற்றம் ஏற்பட்டதால், சென்னைக்கு வந்தோம். எனக்கு எப்போதும் பாடிக்கொண்டே இருக்கும் பழக்கம் உண்டு. வகுப்பு நடக்கும்போதும் பாட்டுப் பாடி ஆசிரியர்களிடம் அடி வாங்கியிருக்கிறேன். நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது தூர்தர்ஷனில் ரினி கண்ணா என்பவர், ஆங்கிலத்தில் செய்தி வாசிப்பார். அதையே கூர்ந்து கேட்பேன். அந்த காலகட்டத்தில் பள்ளியில் காலை நேர அணிவகுப்பில் நாளிதழ்களை பார்த்து செய்திகளை வாசிக்கும்படி மாணவிகளான எங்களிடம் சொல்வார்கள். நான் செய்தியின் தன்மைக்கு தக்கபடி ஏற்ற இறக்கத்தோடு வாசித்து பாராட்டு பெறுவேன். குரல் வளத்தோடு பாடவும் செய்வேன்.
பிளஸ்-டூ படித்து முடித்த பின்பு நான் வீட்டில் இருந்து அவ்வப்போது பாடிக்கொண்டிருந்ததை பக்கத்து வீட்டில் வசித்த தயாரிப்பாளர் ஹனுமந்தராவ் கேட்டுவிட்டு, ‘உனக்கு குரல் வளம் இருக்கிறது. முறைப்படி நீ பாட்டு பயிற்சி பெறாததால் டப்பிங் பேச முயற்சிசெய்’ என்று கூறி, அவர் என்னை இந்த துறைக்கு அறிமுகம் செய்தார். அந்த முயற்சி ஒருபுறம் நடந்துகொண்டிருக்க நான் ஸ்ருதி பாலாஜியின் இசைக்குழுவில் 17 வயதில் பாடத் தொடங்கினேன். அந்த இசைக்குழுவில்தான் நான் முதல் சம்பளம் பெற்றேன். அங்கிருந்து என் வளர்ச்சி தொடங்கியது. காதல் கொண்டேன் சினிமா மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானேன். அதில் சோனியா அகர்வாலுக்கு குரல்கொடுத்தேன். தனம் படத்தில் நடிகை சங்கீதாவுக்கு குரல் கொடுத்தேன். நடிகை ரீமா சென்னுக்காகவும் டப்பிங் பேசியிருக்கிறேன். மாலினி ஐயர் என்ற தொடரில் நடிகை ஸ்ரீதேவிக்காக குரல் கொடுத்துள்ளேன். எனது வளர்ச்சியில் மகிழ்ச்சிகொள்ளும் தோழிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களில் பிரியா குறிப்பிடத்தக்கவர். நான் நன்றாக ஓவியம் வரைவேன். போட்டோ எடுப்பது, கவிதை எழுதுவதை யும் விருப்பமாக செய்கிறேன்”
‘ஆலிவுட்டை வியக்கவைத்த தமிழ்க் குரலுக்கு சொந்தக் காரர் என்று உங்களை குறிப்பிடுகிறார்களே அதை பற்றி கூறுங்கள்..?’
“ஆலிவுட் படங்களில் கதாநாயகியே பேயாகவும் மாறுவார். முதலில் இயல்பாக கதாநாயகிக்கு டப்பிங் குரல் கொடுப்பார்கள். பின்பு அந்த குரலில் பிராசசிங் மூலம் சில கலப்பு முறைகளை கையாண்டு பேய் குரலாக கொடுக்கச் சொல்வார்கள். அப்படி எந்த பிராசசிங் முறையும் இல்லாமல் ஒரே ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மட்டும் ஆலிவுட்டில், கதாநாயகிக்கும்- பேய்க்கும் குரல் கொடுத்துள்ளார். நியூ எக்சார்சிம் என்ற ஆலிவுட் படத்தை தமிழில் மொழி மாற்றம் செய்தார்கள். அதற்கு கதாநாயகி, பேய்க் குரல் இரண்டுக்கும் நானே எந்த பிராசசிங் முறையையும் கையாளாமல் டப்பிங் பேசினேன். ஆலிவுட் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டின் சாதனையை சமன் செய்ததற்காக என்னை ‘ஆலிவுட்டை வியக்கவைத்த தமிழ்க் குரல்’ என்று பாராட்டினார்கள். ஏராளமான கார்ட்டூன் தொடர்களுக்கும் குரல் கொடுத்திருக்கிறேன். மினி மவுஸ், டெய்சி டக், டோரி போன்ற ஏராளமான கதாபாத்திரங்கள் என் குரலில் வலம் வருகின்றன. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் டப்பிங் பேசியிருக்கிறேன்”
‘பொதுவாக எத்தனை வயது வரை பெண்களால் டப்பிங் பேச முடியும்?’
“வாய்ஸ்க்கு வயசு இல்லை. நான் இருபது வயதிலே அறுபது வயது பாட்டி போல் டப்பிங் பேசியிருக்கிறேன். அதனால் அறுபது வயதிலும் இளமையான குரலைக்கொடுக்க என்னால் முடியும். இது கடவுள்கொடுத்த கொடை. அவரது கருவியாக நான் செயல்படுகிறேன்..” என்று கூறும் பிரமிளா குரலை பாதுகாப்பதற்காக அவ்வப்போது வால் மிளகை மென்று சுவைக்கிறார். குளிர்ச்சியான உணவுகள் எதையும் இவர் அதிகம் சாப்பிடுவதில்லை. ஏழைகளுக்கு உதவி செய்வதை வழக்கமாக்கியிருக்கும் இவர், எதிர்காலத்தில் ஆதரவற்றோர்களுக்கான இல்லத்தை தொடங்கி, சேவை செய்யும் நோக்கில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.