கருப்புக்கொடி ஏந்தி பா.ம.க. போராட்டம்

பா.ம.க சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் நடைபெற்றது.

Update: 2018-03-31 23:00 GMT
மதுராந்தகம், 

காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட பா.ம.க சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மதுராந்தகம் ஒன்றியம், சித்தாமூர், அச்சரப்பாக்கம், லத்தூர், இடைக் கழிநாடு, கருங்குழி பேரூராட்சி உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் உள்ள வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் நடைபெற்றது.

பா.ம.க மாநில துணை பொதுச்செயலாளர் கங்காதரன் தலைமையில், மாவட்ட செயலாளர் ஆத்தூர் கோபாலகண்ணன் முன்னிலையில் கருப்புக்கொடி ஏந்தி பேரணி நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் சபரி சங்கர், சகாதேவன், சரவணன், மகேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்