முத்தலாக் தடை மசோதாவை கண்டித்து முஸ்லிம் பெண்கள் போராட்டம்
முத்தலாக் தடை மசோதாவை கண்டித்து ஆசாத் மைதானத்தில் முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மும்பை,

போராட்டம்
மத்திய அரசின் முத்தலாக் தடை மசோதாவுக்கு முஸ்லிம்கள் இடையே ஆதரவும், எதிர்ப்பும் இருந்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று முத்தலாக் மசோதாவுக்கு எதிராக மும்பை ஆசாத் மைதானத்தில் அனைத்து இந்திய முஸ்லிம் தனி சட்ட வாரியத்தின் பெண்கள் பிரிவு சார்பில் போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்தில் மும்பை மட்டும் இன்றி தானே, நவிமும்பை மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த திரளான முஸ்லிம் பெண்கள் கலந்து கொண்டனர். அவர்கள் முத்தலாக் தடை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.
போக்குவரத்து நெரிசல்
முன்னதாக போராட் டத்திற்கு திரண்டவர்களால் நேற்று மும்பை சி.எஸ்.எம்.டி. பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சி.எஸ்.எம்.டி. பகுதியில் ஓரிரு இடங்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்து இருந்தனர். இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.