6 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே சிறப்பு மலை ரெயில் ஓட தொடங்கியது, சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே 6 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பு மலைரெயில் ஓட தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. யுனெஸ்கோ பாரம்பரியம் மிக்க இந்த ரெயிலில் வெளிநாடு மற்றும் உள்நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு தினமும் காலை 7.10 மணிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் இந்த ரெயிலில் பயணம் செய்ய வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக காலை 7.10 மணிக்கு புறப்படும் மலை ரெயிலில் இடம் கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
எனவே, கோடை கால சிறப்பு ரெயிலை இயக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே கோடைகால சிறப்பு மலை ரெயிலை இயக்க சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே கோடைகால சிறப்பு மலை ரெயில் போக்குவரத்து நேற்று தொடங்கியது.
பர்னஸ் ஆயில் மூலம் இயங்கும் ரெயில் என்ஜினில் 3 பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழாவையொட்டி மேட்டுப்பாளையம் ரெயில் நிலையம் மற்றும் மலை ரெயில் என்ஜின், பெட்டிகளில் பலூன்கள், வாழை மரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முதல் வகுப்பில் 32 இருக்கைகளும், 2-ம் வகுப்பில் 100 இருக்கைகளும் ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்த சிறப்பு ரெயிலில் செல்ல கட்டணமாக முதல் வகுப்புக்கு ரூ.1,210-ம், 2-ம் வகுப்புக்கு ரூ.815-ம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நேற்று இந்த ரெயிலில் பயணம் செய்ய வந்த சுற்றுலா பயணிகளுக்கு தண்ணீர் பாட்டில், குளிர்பானம், நீலகிரி தைலம், நீலகிரி மலை ரெயிலின் சிறப்புகள் குறித்த கையேடு உள்ளிட்டவற்றை சேலம் ரெயில்வே கோட்ட முதன்மை வணிக ஆய்வாளர் சிட்டிபாபு, ரெயில் நிலைய அதிகாரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வழங்கினர்.
இதனை தொடர்ந்து காலை 9.10 மணிக்கு கோடைகால சிறப்பு மலைரெயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு புறப்பட்டு சென்றது. இதனை ரெயில் நிலைய அதிகாரி வேதமாணிக்கம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் ரெயில்வே பொறியாளர் அஸ்ரப், மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் சேரலாதன், ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர்கள் எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம், ஸ்டீபன், டி.எல்.எஸ்.ராஜேந்திரன், அபிபுல்லா, ஜெயக்குமார் ஜார்ஜ், கலைவாணி, ஆலயம் பாலு, வரதராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ரெயிலில் 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மிகுந்த உற்சாகத்துடன் பயணம் செய்து இயற்கை காட்சிகளை கண்டு மகிழ்ந்தனர். மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே கடைசியாக 2012-ம் ஆண்டு கோடைகால சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. அதன் பிறகு ரெயில் என்ஜினில் உந்து சக்தி குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிறப்பு ரெயில் இயக்குவது நிறுத்தப்பட்டது. தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே சிறப்பு மலைரெயில் போக்குவரத்து தொடங்கி உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சிறப்பு மலை ரெயில் போக்குவரத்து ஜூன் மாதம் 24-ந் தேதி வரை (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டும்) இயக்கப்படும். மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மதியம் 12.30 மணிக்கு குன்னூரை செல்லும். பின்னர் அங்கு இருந்து 1.30 மணிக்கு புறப்பட்டு, மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடையும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.