மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் கனிமொழி எம்.பி. பேட்டி
மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று நெல்லையில் கனிமொழி எம்.பி. கூறினார்.
நெல்லை,

நெல்லை மாவட்ட தி.மு.க மகளிர் அணி கூட்டம் நெல்லையில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
காவிரி மேலாண்மை வாரியம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழக முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு இருந்தனர். ஆனால் அவர் நேரம் ஒதுக்கவில்லை. கர்நாடக தேர்தலை மனதில் கொண்டு இந்த பிரச்சினையை மத்திய அரசு காலதாமதம் செய்கிறது. அதனால்தான் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு வரும் போது கருப்புக்கொடி காட்டுவோம் என்று அறிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வகையில் மத்திய அரசுக்கு, அ.தி.மு.க. அரசு போதிய அளவு அழுத்தம் கொடுக்கவில்லை. அனைத்து எம்.பி.க்களும் பாராளுமன்றத்தை நடக்கவிடாமல் ஸ்தம்பிக்க செய்தும் பாரதீய ஜனதா அரசு கண்டு கொள்ளவில்லை. அ.தி.மு.க. எம்.பி.க்கள் ஆளுக்கு ஒரு கருத்தை கூறி இந்த பிரச்சினையை திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள். அந்த கட்சியை பற்றி விமர்சனம் செய்ய நான் விரும்பவில்லை. ஆனாலும் நிலைமையை எடுத்து சொல்லாமல் இருக்க முடியவில்லை.
ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலை பிரச்சினை மிக முக்கியமான பிரச்சினை. இந்த ஆலையால் அந்த பகுதியில் நீர் ஆதாரம் பாதிக்கப்படுகிறது. காற்றில் நச்சு தன்மை பரவி அந்த பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
இப்படிப்பட்ட ஒரு ஆலையை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி கொடுத்தது ஆச்சரியமாக இருக்கிறது. அந்த ஆலைக்கு கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும். மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும். மக்கள் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. பிரச்சினைகளை தீர்க்க முடியாத அரசாக இந்த அரசு உள்ளது. மக்கள், தங்களது பிரச்சினைக்காக போராட்டம் நடத்திதான் தீர்வு காண வேண்டிய உள்ளது. ஜல்லிகட்டு ஆனாலும் சரி, ஸ்டெர்லைட் ஆனாலும் சரி மக்கள் போராட்டம் நடத்தி தீர்வு காண வேண்டிய நிலையில் உள்ளது.
இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.