திசையன்விளை அருகே வேன்–கார் மோதல்; 7 பேர் காயம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை

திசையன்விளை அருகே வேனும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2018-03-31 21:15 GMT
திசையன்விளை,

திசையன்விளை அருகே வேனும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேன்– கார் மோதல்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பட்டர்புரத்தை சேர்ந்த 17 பேர், தூத்துக்குடி மாவட்டம் தச்சன்விளையில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்றுவிட்டு நேற்று அதிகாலை வேனில் ஊர் திரும்பி வந்து கொண்டிருந்தனர். திசையன்விளை அருகே உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தின் அருகே சென்ற போது, எதிரே வந்த காரும், வேனும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதில் வேன் கவிழ்ந்தது. காரின் முன்பகுதியும் அப்பளம் போல் நொறுங்கியது.

வேனில் பயணம் செய்த திருமலை நம்பி (வயது 62), அவருடைய மனைவி சுந்தரம் அம்மாள் (50), மகள் யசோதா (30), பேரன் கிருஷ்ணன் (10) மற்றும் காரில் பயணம் செய்த விழுப்புரத்தை சேர்ந்த ராஜேஷ் (35), திருத்தானூர் வசந்தராஜன் (30), குழந்தை ஏசு (25) ஆகியோர் காயம் அடைந்தனர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

காயம் அடைந்த அனைவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து பற்றி திசையன்விளை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்