மதுரையில் அமைச்சர் உதயகுமார் ஏற்பாட்டில் 120 ஜோடிகளுக்கு திருமணம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வைத்தனர்
மதுரையில் பேரவை செயலாளர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் 120 ஜோடிகளுக்கு திருமணத்தை முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் நடத்தி வைத்தனர். விழாவில் மணமக்களுக்கு 70 வகை சீர்வரிசைகள் வழங்கப்பட்டன.
மதுரை,
ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் விழாவையொட்டி மாநில ஜெயலலிதா பேரவை சார்பில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நேற்று நடைபெற்ற 120 ஜோடி திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு காலை வந்தார். அவரை அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அவருக்கு விமான நிலையத்தில் இருந்து திருமண திடல் வரை பேரவை செயலாளர் அமைச்சர் உதயகுமார் தலைமையில் 50 ஆயிரம் பேரவை தொண்டர்கள் சீருடை அணிந்து வரவேற்றனர்.
விழா மேடைக்கு சென்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் 120 ஜோடிகளின் திருமணத்தை நடத்தி வைத்தனர். பின்னர் மணமகனுக்கு தங்க மோதிரத்தை முதல்-அமைச்சரும், மணமகளுக்கு தங்க காசுகளை துணை முதல்-அமைச்சரும் வழங்கினார்கள்.
மேலும் திருமண ஜோடிகளுக்கு திருமாங்கல்யம், வெள்ளி குங்குமச்சிமிழ் உள்ளிட்ட 70 வகையான சீர்வரிசை பொருட்களை அவர்கள் வழங்கினார்கள்.
விழாவில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் பேரவை மாநில செயலாளர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெள்ளி வேலை பரிசாக வழங்கினார். மேலும் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு மீனாட்சி சிலையையும் அவர் வழங்கினார்.
விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
புரட்சி தலைவி ஜெயலலிதா மதுரையை மிகவும் நேசித்தார். அவரது வழியில் செயல்படும் இந்த அரசும் மதுரைக்கு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
மதுரையில் போக்குவரத்து நெரிலை குறைக்கும் வண்ணம் காளவாசல் சந்திப்பில் ரூ.54 கோடி மதிப்பில் பறக்கும் பாலம் அமைக்க நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு, பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. பரவை முதல் துவரிமான் வரை வைகை ஆற்றின் குறுக்கே ரூ.18 கோடி செலவில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
வைகை வடகரை குருவிக்காரன் சாலையில் வைகை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம், சிட்டம்பட்டியில் இருந்து நகரி வரை 31 கிலோ மீட்டர் தூர உள்வட்ட சுற்றுச்சாலை, பழங்காநத்தத்தில் 6 வழிப்பாதை, கோரிப்பாளையம் முதல் பெரியார் பஸ்நிலையம் வரை யானைக்கல் வழியாக உயர்மட்ட பறக்கும் பாலம் உள்ளிட்ட திட்டங்களுக்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
உத்தங்குடி முதல் கப்பலூர் வரை உள்ள 27.2 கிலோ மீட்டர் சாலை இருவழிப்பாதையில் இருந்து 4 வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு ரூ.214 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.
மதுரையில் நவீன பஸ் முனையம்(பஸ் போர்ட்) விரைவாக தொடங்கப்பட உள்ளது. ஏர்போர்ட் இருப்பதை போல் அனைத்து வசதிகளுடன் பஸ் போர்ட் அமைக்கப்படும். உங்கள் கோரிக்கையை ஏற்று மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கூடுதல் கட்டிடம் கட்ட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மதுரை நகர மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீரை குழாய் மூலம் கொண்டு வர ரூ.1380 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு, அதனை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, சேவூர் ராமச்சந்திரன், தங்கமணி, வேலுமணி, கே.டி.ராஜேந்திரபாலாஜி, பாஸ்கரன், டாக்டர் மணிகண்டன், எம்.எல்.ஏ.க்கள் ராஜன்செல்லப்பா, மாணிக்கம், ஏ.கே.போஸ், பெரியபுள்ளான், இலக்கிய அணிசெயலாளர் வளர்மதி, தென் சென்னை நிர்வாகி சி.பி.மூவேந்தன், புறநகர் மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன், புறநகர் மாவட்ட பேரவை துணை செயலாளர் ஜபார், மாநகர் மாவட்ட பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசன், முத்துராமலிங்கம், முன்னாள் மண்டல தலைவர் சாலைமுத்து, பேரையூர் பேரூர் செயலாளர் நெடுமாறன், தே.கல்லுப்பட்டி பேரூர் செயலாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் ராமசாமி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திருப்பதி, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி, மகளிர் அணி இணைச்செயலாளர் கீர்த்திகா முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.