சிங்கம்புணரியில் பள்ளி மாணவி 4-வது முறையாக கடத்தல்: 6 பேர் மீது வழக்கு

சிங்கம்புணரியில் பள்ளி மாணவியை 4-வது முறையாக கடத்தியவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Update: 2018-03-30 22:15 GMT
சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே உள்ள மணப்பாறை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது45) மற்றும் 5 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் சிங்கம்புணரியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவியின் வீட்டுக்கு சென்று அவரையும், அவருடைய தாயாரையும் ஒரு காரில் கடத்தி சென்றனர்.

பின்னர் பிரான்மலை அருகே செல்லும்போது அந்த மாணவியின் தாயாரை காரில் இருந்து தள்ளி விட்டு மாணவியை மட்டும் அந்த கும்பல் கடத்தி சென்றுவிட்டது.

இதுகுறித்து மாணவியின் தந்தை சிங்கம்புணரி போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சிங்கம்புணரி போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை கடத்திய மணிகண்டன் மற்றும் 5 பேர் கொண்ட கும்பலை தேடிவருகின்றனர்.

மணிகண்டன் கடந்த ஆண்டு 3 முறை இதே மாணவியை பள்ளிக்கு செல்லும்போது கடத்தி சென்றுள்ளார். இதையடுத்து இவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். இந்நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த மணிகண்டன் மீண்டும் அந்த மாணவியை 4-வது முறையாக நேற்று கடத்தி சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்