ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை திசை திருப்ப முயற்சி: நடிகர் கமல்ஹாசன் மீது அர்ஜுன்சம்பத் குற்றச்சாட்டு
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை திசை திருப்பவே நடிகர் கமல்ஹாசன் போராட்டத்தில் பங்கேற்க இருப்பதாக அறிவித்துள்ளார் என்று இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன்சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.
பழனி,
இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத், பழனி புலிப்பாணி ஆசிரமத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்டி, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். கோர்ட்டு உத்தரவு மீது இதுவரை நடவடிக்கை எடுக்காத கர்நாடக மாநில அரசு, முதல்-மந்திரி சித்தராமையா மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும். நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக அரசியலே தனது நோக்கம் என்று தெரிவித்துள்ளார். இந்து மக்கள் கட்சியின் நோக்கமும் தமிழகத்தில் ஆன்மிக அரசியல் மலர வேண்டும் என்பது தான்.
நடிகர் கமல்ஹாசனுக்கு வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களுடனும், நக்சலைட்டுகளுடனும் தொடர்பு உள்ளது. அவர், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று கூறியிருக்கிறார். இது, போராட்டத்தின் நோக்கத்தை திசை திரும்பும் முயற்சி ஆகும்.
இதேபோல் தூத்துக்குடியில் நடந்து வரும் போராட்டத்தில் நக்சலைட்டுகள் ஊடுருவி உள்ளனர். அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும். போராட்டத்தில் தூத்துக்குடி நகர மக்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். அப்போது தான் வெற்றி கிடைக்கும்.
அதே வேளையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண கோர்ட்டு மற்றும் பசுமை தீர்ப்பாயத்தை போராட்டக்காரர்கள் நாட வேண்டும். தமிழகத்தில் ராமராஜ்யம் அமைய இந்து மக்கள் கட்சி பாடுபட்டு வருகிறது. வருகிற சித்திரை மாதம் முழுவதும் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் ராமராஜ்ய ரத யாத்திரை மேற்கொள்ளப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.