எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் மீது மின்கம்பிகள் அறுந்து விழுந்தன
திருப்பத்தூர் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் மீது மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் 8 ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.
ஜோலார்பேட்டை,
திருப்பத்தூர் அருகே உள்ள காக்கங்கரைக்கும்-மொளகாரம்பட்டிக்கும் இடையே நேற்று அதிகாலை 4.40 மணி அளவில் மதுரையில் இருந்து சென்னை நோக்கி செல்லும் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அப்போது திடீரென உயரழுத்த மின்கம்பிகள் அறுந்து அந்த ரெயிலின் என்ஜின் மீது விழுந்தது. இதனையடுத்து ரெயில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று நின்றது.
இதுகுறித்து என்ஜின் டிரைவர் சேலம் மற்றும் ஜோலார்பேட்டை ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ரெயில்வே தொழிலாளர்கள், மின்சார பிரிவு தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனால் அந்த வழியாக செல்லும் 8 ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் மின்கம்பிகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் நடுவழியில் சுமார் 4 மணி நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மங்களூரு - சென்னை எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் - சென்னை எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் - சாலிமர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் சாமல்பட்டியில் இருந்து திருப்பத்தூர் வரை எதிர்திசையில் வரும் சென்னையில் இருந்து சேலம் செல்லும் வழித்தடத்தில் மாற்றிவிடப்பட்டது. இதனையடுத்து திருப்பத்தூரில் இருந்து அந்த 3 ரெயில்கள் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.
இந்த நிலையில் ரெயில்வே ஊழியர்கள் சுமார் 5 மணி நேரம் போராடி காலை 9.40 மணிக்கு மின்கம்பிகளை சரி செய்தனர். அதைத் தொடர்ந்து ரெயில்கள் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டு சென்றன.
மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் திருவனந்தபுரம் - சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில், கொச்சிவேலி - பெங்களூரு நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில், மதுரை - சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட 5 ரெயில்கள் 5 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. இதனால் ரெயில் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.