டியூசன் போகாததை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

டியூசன் போகாததை பெற்றோர் கண்டித்ததால், பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-03-30 21:43 GMT
தாம்பரம்,

சென்னையை அடுத்த குரோம்பேட்டை, கக்கலஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் பரசுராமன். ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி தனியார் துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன்கள் விக்னேஷ்(வயது 16), பிரவீன்.

இதில் விக்னேஷ், குரோம்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். அவர், டியூசனுக்கு சரியாக செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதை அவரது பெற்றோர் கண்டித்தனர்.

இதனால் மனம் உடைந்த விக்னேஷ், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

சென்னையை அடுத்த அனகாபுத்தூர் தேவராஜ் நகரைச் சேர்ந்தவர் ரவீந்திரன்(59). இவர், சென்னை விமான நிலையத்தில் எலக்ட்ரீக்கல் வேலை செய்து வந்தார். இரவு பணி முடிந்து காலையில் வீட்டுக்கு வந்தார்.

அப்போது மிகுந்த மனஉளைச்சலில் இருந்த அவர், திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் படு காயம் அடைந்த ரவீந்திரன், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை பரிதாபமாக இறந்தார். இதுபற்றி சங்கர் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்