புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் மீது வழக்கு

திருவள்ளூரில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2018-03-30 21:42 GMT
திருவள்ளூர், 

திருவள்ளூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூர் கம்பர் தெரு, பெருமாள் தெரு, நேதாஜி சாலை போன்ற பகுதிகளில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடைகளில் போலீசார் சோதனை செய்தார்கள். 3 கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்ததை கண்டறிந்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்து கடைக்காரர்களான திருவள்ளூர் கம்பர் தெருவை சேர்ந்த வெங்கடேசன் (வயது 50), பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் (59), நேதாஜி சாலையை சேர்ந்த சின்னதுரை (60) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 

மேலும் செய்திகள்