புதிய அனல் மின் நிலையத்துக்கு நிலக்கரி கொண்டு செல்ல கன்வேயர் பெல்ட் எந்திரம், என்.எல்.சி. தலைவர் இயக்கி வைத்தார்
புதிய அனல் மின் நிலையத்துக்கு நிலக்கரி கொண்டு செல்ல அமைக்கப்பட்ட கன்வேயர் பெல்ட் எந்திரத்தை என்.எல்.சி. தலைவர் சரத்குமார் ஆச்சார்யா இயக்கி வைத்தார்.
நெய்வேலி,
நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தில் மணிக்கு 29 லட்சத்து 90 ஆயிரம் யூனிட் மின்சக்தி உற்பத்தி செய்யும் திறன்கொண்ட 4 அனல் மின் நிலையங்கள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் மணிக்கு 10 லட்சம் யூனிட் மின் உற்பத்தி செய்யும் திறன்கொண்ட புதிய அனல்மின் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய அனல்மின் நிலையத்திற்கு எரிபொருள் வழங்குவதற்காக, 30 லட்சம் டன் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கும் திறன் கொண்ட சுரங்கம் 1 ஏ திறனை, 70 லட்சமாக அதிகரிக்க ரூ.1,458 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக சுரங்கம் 1 ஏ பகுதியில் இருந்து புதிதாக அமைக்கப்பட்டு வரும் அனல் மின் நிலையத்திற்கு பழுப்பு நிலக்கரி எடுத்து செல்வதற்காக புதிய கன்வேயர் வசதி அமைக்கும் பணிகளும் நடைபெற்று வந்தன.
அதன்படி, சுரங்கம் 1 ஏ சேமிப்பு கிடங்கில் இருந்து முதல் சுரங்கத்திற்கு சுமார் 2,400 மீட்டர் கன்வேயரும், புதிய அனல் மின் நிலையத்தின் பழுப்பு நிலக்கரி செல்லும் நுழைவு வாயில் அருகில் 288 மீட்டர் கன்வேயரும் புதிதாக அமைக்கப்பட்டது. அத்துடன், முதல் சுரங்கத்திலிருந்து அனல்மின் நிலையங்களுக்கு செல்லும், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள கன்வேயர் வசதிகளையும், இணைத்து மொத்தம் 6.12 கிலோ மீட்டர் நீளத்தில் புதிய அனல் மின் நிலையத்திற்கு பழுப்பு நிலக்கரி வழங்க கன்வேயர் பெல்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், முதலில் திட்டமிட்ட 9.37 கிலோமீட்டர் தூரத்தைவிட 3.25 கிலோமீட்டர் தூரம் குறைந்ததுடன் சுமார் ரூ.750 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.
இதனால் ரூ.1,458 கோடி மதிப்பீட்டில் செய்ய திட்டமிடப்பட்டிருந்த சுரங்கம் 1 ஏ விரிவாக்க பணி ரூ.709 கோடி செலவில் நிறைவுபெறும்.
புதிய கன்வேயர் பெல்ட் எந்திரம் அமைக்கும் பணி நடைபெற்று முடிவடைந்ததையடுத்து, என்.எல்.சி. தலைவர் சரத்குமார் ஆச்சார்யா கன்வேயர் பெல்ட் எந்திரத்தை இயக்கி வைத்து, அதற்கான கல்வெட்டை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், என்.எல்.சி. இயக்குனர்கள் ராக்கேஷ்குமார், சுபீர்தாஸ், தங்கபாண்டியன், செல்வகுமார், விக்ரமன், சுரங்கத்துறை செயல் இயக்குனர் சையதுஅப்துல் பதேக் காலித், சுரங்கம் 1 ஏ தலைமை பொதுமேலாளர் அரவிந்த்குமார், சுரங்கம் 1 ஏ மற்றும் புதிய அனல்மின் நிலையத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.