விஷம் குடித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை

விஷம் குடித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-03-30 21:04 GMT
கல்பாக்கம், 

காஞ்சீபுரம் மாவட்டம் ஆயப்பாக்கம் கிராமம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (30). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி உமா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் அய்யப்பன், உமா இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து உமா கோபித்து கொண்டு திருக்கழுக்குன்றத்தை அடுத்த பரமசிவம் நகரில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்று விட்டார்.

இதனால் மன வருத்தத்தில் இருந்த அய்யப்பன் மனைவியை அழைத்து வருவதற்காக பரமசிவம் நகருக்கு சென்றார்.

தற்கொலை

மனைவியை தன்னுடன் வரும்படி அழைத்தார். மனைவி அவருடன் வர மறுத்ததால் அய்யப்பன், தான் மறைத்து வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்தார்.

இதில் மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் திருக்கழுக்குன்றம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். 

மேலும் செய்திகள்