சிறுவர் காப்பக மேம்பாட்டுக்கு மாதிரி திட்டம் அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
சிறுவர் காப்பக மேம்பாட்டுக்கு மாதிரி திட்டத்தை உருவாக் குமாறு அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
மும்பை,
சிறுவர் காப்பக மேம்பாட்டுக்கு மாதிரி திட்டத்தை உருவாக்குமாறு அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
பொதுநலன் வழக்கு
மும்பை மான்கூர்டில் உள்ள சிறுவர் காப்பகத்தின் அவலநிலை குறித்து தொடரப்பட்ட பொதுநலன் வழக்கு ஐகோர்்ட்டில் நீதிபதிகள் என்.எச்.பாட்டீல், குல்கர்னி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-
மாதிரி திட்டம்
சிறுவர் காப்பகங்களை மேம்படுத்த உறுதியான நிர்வாகம், கண்காணிப்பு, சிறப்பு கவனம் தேவை. இதற்காக மாதிரி திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும். முதலில் மான்கூர்டு சிறுவர் காப்பகத்தில் மாதிரி திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்து மற்ற காப்பகங்களுக்கும் அதனை விரிவுப்படுத்தலாம்.
காப்பகத்தில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்யும் திறனுடன் இருக்க வேண்டும்.
நாப்கின்
காப்பகத்தில் உள்ள சிறுமிகளுக்கு சானிட்டரி நாப்கின் பிரச்சினையை ஓரிரு நாட்களில் சரி செய்து விடலாம். இந்த பணியில் பல்ே்வறு தொண்டு நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. இந்த விவகாரத்தில் குறைந்த விலையில் நாப்கின்களை உற்பத்தி செய்யும் எந்திரத்தை கையாளும் அருணாசலம் முருகானந்தத்தை அரசு ஏன் கலந்து ஆலோசிக்கக்கூடாது.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
இதையடுத்து அரசு சிறப்பு வக்கீல், இந்த பிரச்சினைகளை அரசு தீவிரமான முறையில் கவனித்து வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ெதரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட விசாரணையை ஏப்ரல் 20-ந் தேதிக்கு தள்ளி வைப்பதாகவும், அதற்குள் அரசு எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.