திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று பங்குனி உத்திர திருவிழா பக்தர்கள் குவிந்தனர்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. விழாவையொட்டி கோவிலில் பக்தர்கள் குவிந்து உள்ளனர்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. விழாவையொட்டி கோவிலில் பக்தர்கள் குவிந்து உள்ளனர்.
பங்குனி உத்திர திருவிழா
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. அதிகாலை 5.30 மணிக்கு வள்ளி அம்பாள் தபசுக்கு எழுந்தருளுகிறார்.
மாலை 4.30 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, மேல கோவில் பந்தல் மண்டப முகப்பிற்கு செல்கிறார். அங்கு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், வள்ளி அம்பாளுக்கும் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் சுவாமி- அம்பாள் திருவீதி உலா சென்று, கோவிலை சேர்கிறார்கள். இரவு 10 மணிக்கு கோவிலில் 108 மகாதேவர்கள் சன்னதி முன்பு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், வள்ளி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.
பாத யாத்திரை பக்தர்கள்
விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். பெரும்பாலான பக்தர்கள் பச்சை மற்றும் காவி நிற ஆடை அணிந்தும், காவடி எடுத்தும், அலகு குத்தியும் கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் கோவில் வளாகம், மண்டபங்கள், விடுதிகளில் தங்கியிருந்து முருக பெருமானின் திருப்புகழை பாடி வழிபடுகின்றனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.