நகை கடையில் கொள்ளை: நாதுராம் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நாதுராம், அவருடைய கூட்டாளி பக்தாராம் இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும்படி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
செங்குன்றம்,
சென்னை கொளத்தூரில் உள்ள நகை கடையின் மேற்கூரையை துளைபோட்டு உள்ளே புகுந்து தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளியான பிரபல கொள்ளையன் நாதுராம் மற்றும் அவரது கூட்டாளிகளான பக்தாராம், தினேஷ்சவுத்ரி ஆகியோரை ராஜஸ்தான் மாநில போலீசார் கைது செய்தனர். அவர்களை சென்னைக்கு அழைத்து வந்த தனிப்படை போலீசார், புழல் சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் கைதான நாதுராம், அவருடைய கூட்டாளி பக்தாராம் இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும்படி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர்கள் இருவரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கான உத்தரவு நகலை புழல் சிறை அதிகாரிகளிடம் போலீசார் வழங்கினர்.