அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்கள் உண்ணாவிரதம்

அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பணியாளர்கள் நலச்சங்கங்கள் இணைந்து ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பை ஏற்படுத்தி நேற்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர்.

Update: 2018-03-28 22:30 GMT
சேலம்,

அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பணியாளர்கள் நலச்சங்கங்கள் இணைந்து ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பை ஏற்படுத்தி நேற்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர். உண்ணாவிரத போராட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் செல்லப்பாண்டி, நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மனோகரன் வரவேற்று பேசினார். 2 ஆண்டுக்கும் மேலாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை 1.1.2016 முதல் நிலுவைத்தொகையுடன் வழங்க வேண்டும், 13-வது ஊதிய ஒப்பந்தப்படி அளிக்கப்பட்ட ஊதிய உயர்வை ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும், பென்சனை அரசே ஏற்று மாதந்தோறும் 1-ந் தேதியே வழங்க வேண்டும், சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் மட்டும் இதுவரை வழங்காமல் உள்ள சமூக பாதுகாப்பு நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் பல்வேறு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு உண்ணாவிரத போராட்டத்தை வாழ்த்தி பேசினர். 

மேலும் செய்திகள்