கூட்டுறவு தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி 6 எம்.எல்.ஏ.க்கள் 8½ மணி நேரம் உள்ளிருப்பு போராட்டம்
நாகர்கோவிலில் கூட்டுறவு தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி 6 எம்.எல்.ஏ.க்கள் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் புகுந்து நேற்று 8½ மணி நேரம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரியின் நடவடிக்கையை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் 4 கட்டமாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக வருகிற 2-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ள 114 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், பால் கூட்டுறவு சங்கங்கள், மீனவர் கூட்டுறவு சங்கங்கள், கைத்தறி மற்றும் துணிநூல்துறை கூட்டுறவு சங்கங்கள் போன்றவற்றுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேட்பு மனு தாக்கல் நடந்தது.
வேட்பு மனு பரிசீலனை தினமான நேற்று முன்தினம் மாலையில் அந்தந்த கூட்டுறவு சங்கங்களில் தகுதியான வேட்பாளர் பட்டியல் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான சங்கங்களில் குறிப்பிட்ட நேரத்தில் தகுதியான வேட்பாளர்கள் பட்டியலை ஒட்டவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று காலையில், குறிப்பிட்ட சிலர் வெற்றி பெறும் வகையில் பட்டியல் கூட்டுறவு சங்கங்களில் ஒட்டப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கூட்டுறவு சங்க தேர்தலில் போட்டியிடக்கூடியவர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது. தேர்தல் நடைபெற உள்ள கூட்டுறவு சங்கங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் பதற்றம் நிலவியது.
இதற்கிடையே நேற்று காலை 10.45 மணி அளவில் குமரி மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோதங்கராஜ், ராஜேஸ்குமார், பிரின்ஸ் உள்பட 6 எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க. நகர செயலாளர் வக்கீல் மகேஷ், பா.ஜனதா மாநில துணை தலைவர் எம்.ஆர்.காந்தி, குமரி மாவட்ட பா.ஜனதா தலைவர் முத்துக்கிருஷ்ணன்,
குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் அந்தோணி, மோஷிதயான், மணவை கண்ணன் உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக வளாக கூடுதல் கட்டிடத்தில் அமைந்துள்ள கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தனர்.
பின்னர் அலுவலகத்துக்குள் நுழைந்து, அங்கிருந்த கூட்டுறவு தேர்தல் மாவட்ட பார்வையாளரும், கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளருமான நடுக்காட்டு ராஜாவை முற்றுகையிட்டனர். கூட்டுறவுத்துறை தேர்தலில் முறைகேடுகள் நடைபெற காரணமாக இருந்ததாக கூறி அதிகாரிகளை கண்டித்து கோஷங்களை எழுப்பி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எம்.எல்.ஏ.க்கள் அலுவலகத்துக்குள் வந்தபோது இணைப்பதிவாளர் நடுக்காட்டு ராஜா உரிய மரியாதை கொடுக்கவில்லை என்று கூறி அதிகாரியிடம் எம்.எல்.ஏ.க்களும், உடன் வந்திருந்த அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் அலுவலகத்தில் இருந்த நாற்காலிகளை தூக்கி வீசினர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதை செல்போனில் வீடியோ எடுத்த கூட்டுறவுத்துறை பணியாளர் ஒருவர் தாக்கப்பட்டதாகவும், அவர் குண்டுக்கட்டாக வெளியே தூக்கிச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த ஊழியரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதிகாரியிடம் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து வாக்குவாதம் செய்தனர். மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோஷமிட்டனர். இதைத்தொடர்ந்து பேசிய இணைப்பதிவாளர், கூட்டமாக வந்ததால் எம்.எல்.ஏ.க்களை கவனிக்கவில்லை என்று கூறிய அவர், அதற்காக வருத்தம் தெரிவித்தார். இதற்கிடையே இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்து நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு கோபி தலைமையில் அதிரடிப்படை போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி நிர்வாகிகளைத்தவிர, அவர்களுடைய ஆதரவாளர்கள் அனைவரையும் அலுவலகத்தை விட்டு வெளியேற்றி, பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.
அதன்பிறகு கூட்டுறவு தேர்தல் மாவட்ட பார்வையாளர் நடுக்காட்டு ராஜாவிடம் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி எம்.எல்.ஏ.க்கள் மனு கொடுத்தனர். மேலும் அவர்கள் கூறும்போது, “சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, முதற்கட்டமாக நடைபெற உள்ள 114 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை ரத்து செய்து அறிவித்தால் தான் நாங்கள் இங்கிருந்து செல்வோம். இல்லையென்றால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்“ என்று கூறினர்.
அதற்கு அதிகாரி நடுக்காட்டு ராஜா, விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் எம்.எல்.ஏ.க்கள், தேர்தலை ரத்து செய்யும் வரை நாங்கள் இங்கேயே இருக்கிறோம் என்று கூறி அந்த அலுவலகத்திலேயே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.
சிறிது நேரம் கழித்து அதிகாரி நடுக்காட்டு ராஜா, “எம்.எல்.ஏ.க்களிடம் நீங்கள் சாப்பிட்டு விட்டு வாருங்கள்“ என்றார். அதற்கு எம்.எல்.ஏ.க்கள் நாங்கள் சாப்பாடு பொட்டலம் வாங்கி சாப்பிட்டுக் கொள்கிறோம். எங்களது கோரிக்கைக்கு தீர்வு காணப்படும் வரை நாங்கள் இங்கேயே அமர்ந்திருப்போம் என்று கூறி அமர்ந்திருந்தனர். அங்கு இருந்த எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் சாப்பாடு பொட்டலம் வரவழைக்கப்பட்டு வழங்கப்பட்டது.
மாலை வரை அதிகாரியின் அலுவலகத்தை விட்டு யாரும் கலைந்து செல்லாததால், நாகர்கோவிலில் உள்ள கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் பகல் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.
பின்னர் மாலை 6.45 மணிக்கு அதிகாரி நடுக்காட்டு ராஜா நடவடிக்கை எடுத்து, எம்.எல்.ஏ.க்கள் புகார் கூறிய நாகர்கோவில் சரகத்தில் உள்ள 2 கூட்டுறவு சங்கங்களுக்கும், தக்கலை சரகத்தில் உள்ள 7 கூட்டுறவு சங்கங்களுக்கும் என மொத்தம் 9 சங்கங்களுக்கு மறுதேர்தல் நடத்த பரிந்துரை செய்து மாநில கூட்டுறவு தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பினார். அதன் நகல்கள் எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்பட்டது. அதில் அதிகாரி நடுக்காட்டு ராஜா கூறி இருப்பதாவது:-
எம்.எல்.ஏ.க்கள் புகார் மனு தொடர்பாக சம்பந்தப்பட்ட நாகர்கோவில் மற்றும் தக்கலை தேர்தல் அலுவலர்கள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அதில் முதல் கட்டம் முதல் நிலையில் தேர்தல் நடத்தப்பட வேண்டிய நாகர்கோவில் சரகத்துக்கு உட்பட்ட வடக்கு தாமரைக்குளம், புத்தேரி ஆகிய 2 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தக்கலை சரகத்துக்கு உட்பட்ட ராமவர்மன்சிறை, குலசேகரம், பேச்சிப்பாறை, மேலப்பெருவிளை, ஐரேனிபுரம், வெங்கஞ்சி, வீரநாராயணசேரி ஆகிய 7 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் நடைபெற்றுள்ளதாகவும், இந்த சங்கங்களில் தேர்தல் நடைபெற்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்கள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். எனவே மாவட்ட தேர்தல் அலுவலர்கள் அறிக்கையின்படி மேற்கண்ட சங்கங்களுக்கு மறு தேர்தல் நடத்துதல் தொடர்பாக உரிய அறிவுரை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து போராட்டம் நடத்திய எம்.எல்.ஏ.க்கள் இரவு 7.15 மணிக்கு தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்று அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இதனால் 8½ மணி நேரம் நடந்த இந்த உள்ளிருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது. பின்னர் எம்.எல்.ஏ.க்கள், கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை சந்தித்து தேர்தல் முறைகேடு குறித்து தெரிவித்தனர்.