சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2018-03-28 21:00 GMT
சாத்தான்குளம்,

சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நெல் கொள்முதல் நிலையம்

சாத்தான்குளம் அருகே பேய்க்குளம்- பிரண்டார்குளம் சாலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நெல் கொள்முதல் நிலையம் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டது. பேய்க்குளம் சுற்று வட்டார பகுதி விவசாயிகள் நெல் அறுவடை செய்த பின்னர் நெல் மூட்டைகளை இங்கு கொண்டு வந்து, அரசு நிர்ணயிக்கும் விலைக்கு விற்று செல்வது வழக்கம்.

இந்த ஆண்டு இதுவரை பேய்க்குளத்தில் நெல் கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிடவில்லை. எனினும் கடந்த ஒரு வார காலமாக விவசாயிகள், தங்களது நெல் மூட்டைகளை நெல் கொள்முதல் நிலையத்தில் வழங்குவதற்காக, அதன் அருகில் உள்ள களத்தில் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து விட்டு, அதன் அருகில் இரவு பகலாக காவல் காத்து வருகின்றனர்.

குறைந்த விலை

கடந்த ஆண்டு ஒரு மூடை (70 கிலோ) நெல் ரூ.1,200 வரையிலும் அரசு கொள்முதல் செய்தது. அரசு கொள்முதல் நிலையத்தை திறக்க காலம் தாழ்த்துவதால், சில தனிநபர்கள் விவசாயிகளிடம் ஒரு மூட்டை நெல் ரூ.800-க்கு கொள்முதல் செய்து வருகின்றனர்.எனவே பேய்க்குளத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை உடனே திறக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்