போடியில் தூக்குப்போட்டு போலீஸ்காரர் மனைவி தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை
போடியில் போலீஸ்காரர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
போடி,
போடி புதூரில் உள்ள போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 32). இவர் போடி நகர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக உள்ளார். இவருடைய மனைவி உமாவதி (27). இவர்களுக்கு ஹன்சிகா (2) என்ற மகள் உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளாகிறது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் வீட்டில் மோகன்குமார் குடும்பத்துடன் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது ஏதோ சத்தம் கேட்டு அவர் எழுந்ததாக கூறப்படுகிறது. அங்கு கயிற்றில் உமாவதி தூக்கு மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனே அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி உமாவதி இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து போடி நகர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராஜலிங்கம் வழக்குப்பதிவு செய்து அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து, உமாவதி இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார். மேலும் அவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ.சென்னியப்பன் விசாரணை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே உமாவதி சாவில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை மணி போடி நகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.