கொடைக்கானலில் ஆயுதப்பயிற்சி: பெண் மாவோயிஸ்டை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவு
கொடைக்கானல் அருகே வடகவுஞ்சி வனப்பகுதியில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு மாவோயிஸ்டுகள் பதுங்கி இருந்தனர்.
திண்டுக்கல்,
கொடைக்கானல் அருகே வடகவுஞ்சி வனப்பகுதியில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு மாவோயிஸ்டுகள் பதுங்கி இருந்தனர். இதையடுத்து அதிரடிப்படை போலீசார் அவர்களை சுற்றிவளைத்தனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாவோயிஸ்டு நவீன்பிரசாத் கொல்லப்பட்டார். மேலும் 7 பேர் தப்பியோடி விட்டனர். இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் தப்பியோடிய மாவோயிஸ்டுகள் ரஞ்சித், கண்ணன், நீலமேகம், ரீனா ஜாய்ஸ்மேரி, காளிதாஸ், செண்பகவல்லி, பகத்சிங் ஆகியோர் தமிழ்நாடு, கேரளா, கர்நாடக போலீசாரால் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர். அதில் காளிதாஸ், செண்பகவல்லி தவிர மற்ற 5 பேரும் கொடைக்கானல் வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு விட்டனர். அதில் ரஞ்சித் ஜாமீனில் சென்று விட்டார்.
இதற்கிடையே புழல் சிறையில் இருக்கும் செண்பகவல்லியை கைது செய்ய அனுமதி கேட்டு, திண்டுக்கல் 2–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கொடைக்கானல் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து மாவோயிஸ்டு செண்பகவல்லியை கைது செய்து கோர்ட்டில் இன்று (புதன்கிழமை) ஆஜர்படுத்தும்படி மாஜிஸ்திரேட்டு பாலமுருகன் உத்தரவிட்டார். அதன்பேரில் பெண் மாவோயிஸ்டு செண்பகவல்லி இன்று திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அப்போது அவரை, காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.