சாத்தூரில், ஆக்கிரமிப்புகளை அகற்ற த.மா.கா. வலியுறுத்தல்

சாத்தூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா. வலியுறுத்தியுள்ளது.

Update: 2018-03-27 21:45 GMT
சாத்தூர்,

தெற்கு மாவட்ட த.மா.கா. சார்பில் வட்டார, நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தெற்கு மாவட்ட தலைவர் அரசன் கார்த்திக் தலைமையில் சாத்தூரில் நடந்தது. துணை தலைவர் பாண்டியன், நகர துணை தலைவர் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டது.

கூட்டத்தில் வட்டார தலைவர் முத்துவேல், லெக்கன், நத்தத்துப்பட்டி தங்கம், ரவி, படந்தால்ராஜா, நகர மாணவரணி தலைவர் சங்கர், மாவட்ட இளைஞரணி செயலாளர் கும்கி கார்த்திக், நகர பொருளாளர் சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாத்தூரில் வடக்குரத வீதி, பிள்ளையார்கோவில் தெரு, பழைய படந்தால் ரோடு, பெருமாள் கோவில் தெற்கு வீதி உள்ளிட்ட பகுதியிலும் மதுரை பஸ் நிறுத்த பகுதியிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதோடு முக்குராந்தலில் உள்ள உயர் கோபுர மின் விளக்கை முழுமையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வைப்பாறில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வது அவசியமாகும். ஒத்தையால் பகுதியில் அடிப்படை வசதி செய்து கொடுக்க பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. 

மேலும் செய்திகள்