போலி ஆவணம் மூலம் விற்ற தந்தை-மகன் கைது
திருட்டு கார்களை வாங்கி போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்த தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.
செங்குன்றம்,
செங்குன்றத்தை அடுத்த வடகரையை சேர்ந்தவர் அருண்(எ)செம்மரக்கட்டை அருண். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு செம்மரக்கடத்தல் வழக்கில் தனது கூட்டாளிகள் 5 பேருடன் கைது செய்யப்பட்டார்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் சொகுசு கார்களை திருடுவதும், அந்த கார்களில் ஆந்திராவில் இருந்து செம்மரக்கட்டைகள் கடத்தி வந்து செங்குன்றத்தில் உள்ள குடோன்களில் பதுக்கி வைப்பார்கள்.
பின்னர் அந்த திருட்டு கார்களை செங்குன்றம் ஜீவானந்தம் தெருவைச் சேர்ந்த பஷிர்அகமது(45) அவருடைய தந்தை கிதார்முகமது(65) ஆகிய இருவரிடமும் குறைந்த விலைக்கு விற்று விடுவதும் தெரியவந்தது.
அந்த கார்களை வாங்கும் பஷிர் அகமதுவும், கிதார் முகமதுவும் போலி ஆவணங்கள் தயார் செய்து அதனை கூடுதல் விலைக்கு விற்று வந்தனர்.
இதுபற்றி விசாரிக்க புழல் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் தேடுவதை அறிந்ததும் தந்தையும், மகனும் தலைமறைவாகி விட்டனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் செங்குன்றம் வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் தலைமறைவாக இருந்த பஷிர் அகமதுவையும், கிதார் முகமதுவையும் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
2 பேர் மீதும் செங்குன்றம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை புழல் ஜெயிலில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 3 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.