காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி புதுச்சேரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
புதுச்சேரி,
காவிரி நீர் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்று குழுவை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகளும், விவசாய சங்கங்களும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். இதையொட்டி மத்திய அரசை கண்டித்து அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
புதுச்சேரியில் விவசாயிகள் சங்கம் சார்பில் சுதேசி மில் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கீதநாதன் தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர் ராஜா, பொருளாளர் கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் விசுவநாதன் போராட்டத்தை தொடங்கிவைத்தார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை மாநில செயலாளர் சலீம், தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்க சிறப்பு தலைவர் மாசிலாமணி, தலைவர் ரவி, துணைத்தலைவர் பெருமாள், செயலாளர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.