செங்கோட்டையில் புரோட்டா கடையில் தீ விபத்து ரூ.3 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

செங்கோட்டையில் புரோட்டா கடையில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் ரூ.3 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமாகின.

Update: 2018-03-27 20:30 GMT
செங்கோட்டை,

செங்கோட்டையில் புரோட்டா கடையில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் ரூ.3 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமாகின.

புரோட்டா கடையில் தீவிபத்து

நெல்லை மாவட்டம் செங்கோட்டை தஞ்சாவூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் பஷீர் அகமது (வயது 62). இவர் செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே புரோட்டா கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் வழக்கம் போல் கடை வியாபாரத்தை அவருடைய மகன் நியாஸ் (38) முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் ஒரு மணி அளவில் அவரது கடையில் இருந்து திடீரென புகை வந்தது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் இதுபற்றி நியாசுக்கு தகவல் கொடுத்தனர். அவர் வந்து பார்க்கும் போது தீ மளமளவென எரிய தொடங்கியது.

பொருட்கள் எரிந்து நாசம்

உடனே செங்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் நிலைய அதிகாரி சிவசங்கரன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்தனர். சில மணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். மேலும் பக்கத்தில் இருக்கும் பெட்டி கடைகளுக்கு தீ பரவாமல் இருக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். ஆனாலும் இந்த தீவிபத்தில் ஓட்டல் முழுவதும் எரிந்து விட்டது. 4 கிரைண்டர்கள், குளிர்சாதன பெட்டி, நவீன மேஜை நாற்காலிகள் உள்பட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமானது. அதன் மதிப்பு ரூ.3 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து செங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்