தமிழகம் உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து முதலிடம் எடப்பாடி பழனிசாமி பேச்சு
தமிழகம் உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து முதலிடம் பெற்று திகழ்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.z
சேலம்,
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட பக்கநாட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. அங்கு பக்கநாடு மற்றும் குன்னூரில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மேலும் ரூ.98 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் 5 புதிய கட்டிடங்களை திறந்து வைத்தும், ரூ.1 கோடியே 11 லட்சம் மதிப்பில் 17 புதிய திட்டப்பணிகள் மற்றும் சேலம் மாநகராட்சி பகுதியில் ரூ.7 கோடியே 31 லட்சம் மதிப்பில் 9 திட்டப்பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார்.
அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-
பக்கநாடு கிராமத்தில் வாழ்கின்ற மக்களுக்கு அந்தப் பகுதியிலேயே சிகிச்சை செய்யக்கூடிய ஒரு அருமையான மருத்துவமனையை நாங்கள் தந்திருக்கிறோம். இந்த மருத்துவமனைக்கு இதே பகுதியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் ஒரு புதிய கட்டிடம் கட்டித்தரப்படும். கடந்த 7 ஆண்டுகளில் சேலம் மாவட்டத்தில் மட்டும் 11 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக கோனேரிபட்டி, குன்னூர், சமுத்திரம், பக்கநாடு என 4 இடங்களில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் பக்கநாடு, ஆடையூர், இருப்பாளி, சித்தூர் ஆகிய பகுதி மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றுவதில் நான் முனைப்போடு செயல்படுவேன். அத்துடன் இந்தப் பகுதிக்கு தேவையான அத்தனை அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பேன்.
சேலம் மாவட்டத்தில், ஒரு வருடத்தில் 2 நடமாடும் பள்ளி மருத்துவ குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, 42 நடமாடும் மருத்துவக்குழு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. வருடந்தோறும் 2 முறை பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களில் முகாம் நடத்தப்படுகிறது. இதுவரை 262 குழந்தைகளுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதய அறுவை சிகிச்சை, 29 குழந்தைகளுக்கு தலா ரூ.4 லட்சம் மதிப்புள்ள செவித்திறன் அறுவை சிகிச்சையும், 70 குழந்தைகளுக்கு அன்னப்பிளவு மற்றும் உதடுப்பிளவு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அம்மா ஆரோக்கியத் திட்டம் தொடங்கப்பட்டு 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் வருடம் ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளும் வசதி அனைத்து மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் 2 லட்சத்து 53 ஆயிரம் பேர் பயனடைந்திருக்கிறார்கள். தொலைதூர கிராமத்தில் வசிக்கும் முதியோர்கள், கர்ப்பிணிகளுக்கு அவரவர் வசிக்கின்ற இடத்திலேயே மக்களை நாடிச் சென்று மருத்துவ சேவை வழங்கும் ஒரு வருடத்திற்கு ஒரு நடமாடும் மருத்துவமனை வீதம், சேலம் மாவட்டத்தில் 21 நடமாடும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இனிமேல், மருத்துவமனையை நாடி நீங்கள் போக வேண்டியதில்லை.
இன்று இந்தியாவிலேயே சிறப்பான மருத்துவ சேவை ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வருகிறது. விருதும் பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக கலெக்டர் ரோகிணி வரவேற்று பேசினார். இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.எல்.ஏ.க்கள் ராஜா, மனோன்மணி, மருதமுத்து, சின்னதம்பி, வெற்றிவேல், கூட்டுறவு சங்க தலைவர்கள் கருப்பண்ணன், தனபால், சிவக்குமார், ஆவின் துணைத்தலைவர் ஜெயராமன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மாதேஷ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மாதேஸ்வரன், பூலாம்பட்டி பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.