திங்கள்சந்தை அருகே மாயமான அ.தி.மு.க. பிரமுகர் தூக்கில் பிணமாக தொங்கினார்
திங்கள்சந்தை அருகே மாயமான அ.தி.மு.க. பிரமுகர் தூக்கில் பிணமாக தொங்கினார். இவரது சாவில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அழகியமண்டபம்,
திங்கள்சந்தை அருகே உள்ள நெய்யூர், பெரியபள்ளிரோடு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது37), தச்சு தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. திங்கள்சந்தை பேரூர் அ.தி.மு.க. இளைஞர் பாசறை செயலாளராக இருந்தார்.
இவர் கடந்த 22–ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இவரை உறவினர்கள் பல இடங்களில் தேடினர். ஆனால், எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தாயார் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இரணியல் போலீசார், மாயமான சிவகுமாரை தேடி வந்தனர்.
பிணமாக தொங்கினார்
இந்தநிலையில், நேற்று காலையில் நெய்யூர் பேரூராட்சி அலுவலகத்தின் அருகே காக்கப்பன் குளத்தின் கரையில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒரு ஆண் பிணம் கிடந்தது. இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் இரணியல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் பிணமாக தொங்கியவர், மாயமான அ.தி.மு.க. பிரமுகர் சிவகுமார் என்பது தெரிய வந்தது. அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதனால், அவர் இறந்து 2 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என தெரிகிறது.
இதையடுத்து உடலை போலீசார் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சாவில் சந்தேகம்
இதற்கிடையே சிவகுமாரின் சாவில் சந்தேகம் உள்ளதாக அவரது உறவினர்கள் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகுமாரின் சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.