‘எக்ஸ்பிரைஸ்’ விருது பெற்ற தண்ணீர் அறுவடை திட்டம்

நோபல் பரிசைவிட அதிகத் தொகை கொண்ட பரிசுப் போட்டியாக ‘எக்ஸ்பிரைஸ்’ பரிசு அறிவிக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக பரிசு வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் இந்த பரிசை வழங்குகின்றன.

Update: 2018-03-27 08:27 GMT
 2016-ம் ஆண்டு முதல் நீர் ஆதாரத்தை பெருக்குவது சம்பந்தமான ஆராய்ச்சிகளை ஊக்குவித்து பரிசு வழங்கி வருகிறார்கள். இதற்கு ரூ.1.75 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகை பரிசாக வழங்கப்படுகிறது.

இந்த வருடத்திற்கான ‘நீராதாரம் திரட்டுதல் போட்டியில், சுற்றுப்புறத்தில் இருந்து தண்ணீர் தயாரிக்கும் நுட்பம் பரிசுத் தொகையை வென்றுள்ளது. போட்டியில் 25 நாடுகளைச் சேர்ந்த 98 அணிகள் கலந்து கொண்டன. இதில் 5 அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

இறுதியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த குழுவினர் உருவாக்கி இருந்த ‘ஹைட்ரோ ஹார்வெஸ்ட் ஆபரேசன்’ என்ற திட்டம் பரிசுக்குரியதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. புவிவெப்ப ஆற்றலை பயன்படுத்தி மின்உற்பத்தி செய்வதுடன், தீமையான உமிழ்வுகள் இன்றி காற்றிலிருந்து தண்ணீர் உற்பத்தி செய்யும் வகையில் இவர்கள் தங்கள் திட்டத்தை வடிவமைத்துள்ளனர். இந்த நுட்பத்தில் தினசரி 2 ஆயிரம் லிட்டர் நீரை குறிப்பிட்ட பரப்பளவுக்குள் உற்பத்தி செய்ய முடிவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்