குடிநீரில் பிளாஸ்டிக் துகள்கள்
வாஷிங்டனைச் சேர்ந்த ‘ஆர்ப் மீடியா‘ என்ற அமைப்பு, குடிநீரில் இருக்கும் பிளாஸ்டிக் துகள்களை கண்டறிய முயற்சிகளை எடுத்தது.
5 கண்டங்களைச் சேர்ந்த 9 நாடுகளில், 19 வெவ்வேறு இடங்களில் இருந்து மொத்தம் 250 பாட்டில்களில் நீர் எடுத்து வந்து சோதிக்கப்பட்டது. அப்போது அந்த நீரில் பாலி புரோபிலின், பாலி தைலின், டெரப்தலேட் ஆகிய துகள்கள் இருந்தன. ஒரு பாட்டிலில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துகள்கள் கிடைத்தன. சோதிக்கப்பட்ட பாட்டில்களில் 93 சதவீத துகள்கள் இருந்தது அதிர்ச்சிகரமாக இருந்தது.
மிக நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் தங்களுடைய தண்ணீரில் இருப்பதை 2 பெரிய தண்ணீர் நிறுவனங்கள் ஒப்புக்கொண்டன. ஆனால், ‘ஆர்ப் மீடியா‘ கூறுவது மிகைப்படுத்தப்பட்டவை என்று நிராகரித்தன. பிளாஸ்டிக் துகள்கள் 100 மைக்ரான் அளவில் கலந்திருந்தன. பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்காததால், பாட்டிலிலும் பவுச்சுகளிலும் விற்கப்படும் குடிநீரைத்தான் நம்பியிருக்கிறார்கள் 201 கோடி மக்கள். அசுத்தமான நீரால் ஏற்படும் நோய்களுக்கு அன்றாடம் 4 ஆயிரம் குழந்தைகள் உலகம் முழுக்கப் பலியாகின்றன என்பது கவனிக்கத்தக்க விஷயம்.
குடிநீரில் மட்டும்தான் என்றில்லை, பெருங்கடல்களிலும், மண்ணிலும், காற்றிலும், ஏரிகளிலும், ஆறுகளிலும்கூட நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் கலந்துவிட்டன. இவை 5 மில்லி மீட்டருக்கும் குறைவானவை. இந்த பிளாஸ்டிக் துகள்கள் அனைத்தும் இறுதியில் சங்கமமாவது எங்கே தெரியுமா... மனித உடல்களில். உலக அளவில் குழாய் தண்ணீரிலும் பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருப்பதை ஆர்ப் மீடியா, கடந்த ஆண்டு இதே போன்றதொரு ஆய்வில் கண்டுபிடித்தது.
குடிநீர் வழியாக நமது உடலில் கலக்கும் பிளாஸ்டிக் நுண் துகள்களில் 90 சதவீதம் கழிவுடன் கலந்து வெளியே வந்துவிடும். எஞ்சிய 10 சதவீதம் பற்றி பார்ப்போம். ஐரோப்பிய ஒன்றியம் 2016-ல் தந்த ஒரு அறிக்கையில் சில தகவல்கள் இருக்கின்றன. அதில் 150 மைக்ரான்களுக்கும் குறைவான பிளாஸ்டிக் நுண் துகள்கள் குடலில் நுழையலாம் அல்லது ரத்தத்தில் கலந்து சிறுநீரகங்களையோ ஈரலையோ அடையலாம்‘ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இப்போதைய பாட்டில் குடிநீர் பற்றிய ஆய்வு முடிவுகள், பிளாஸ்டிக் துகள்களின் அளவு எவ்வளவு என்பதை தெரிவிக்கின்றன. அதே சமயம், குடலுக்குச் செல்லும் பிளாஸ்டிக் துகள்கள் என்ன செய்யும் என்பது ஆய்வக முடிவுகளில் இருந்து அல்ல, அறிவியல் அனுமானத்திலிருந்தே கூறப்படுகின்றன. பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்கள் குறித்தும் நமக்குத் தெரியாது. இதில் தெரியாத பல விஷயங்கள் இருக்கின்றன.