ஐ.இ.எஸ். அதிகாரி மற்றும் புவி ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கான தேர்வுகள்
யூ.பி.எஸ்.சி. அமைப்பு, ஐ.இ.எஸ்., ஐ.எஸ்.எஸ். அதிகாரி மற்றும் புவியியல் ஆராய்ச்சியாளர் பணிகளுக்கான ஒருங்கிணைந்த தேர்வுகளை அறிவித்துள்ளது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யூ.பி.எஸ்.சி., பல்வேறு துறைகளில் ஏற்படும் உயர் அதிகாரி பணியிடங்களை தேர்வு நடத்தி நிரப்பி வருகிறது. தற்போது ஐ.இ.எஸ். எனப்படும் இந்தியன் பொருளாதார சேவைப் பணிகள் மற்றும் ஐ.எஸ்.எஸ். எனப்படும் இந்திய புள்ளியியல் சேவைப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வை நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மற்றொரு அறிவிப்பின்படி புவி ஆராய்ச்சியாளர் மற்றும் புவியியலாளர் பணிக்களுக்கான தேர்வையும் வெளியிட்டுள்ளது. ஐ.இ.எஸ்., ஐ.எஸ்.எஸ். பணிகளுக்கு 46 இடங்களும், புவி ஆராய்ச்சியாளர் மற்றும் புவியியலாளர் போன்ற பணிகளுக்கு 70 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...
ஐ.இ.எஸ்., ஐ.எஸ்.எஸ். பணிகள்
ஐ.இ.எஸ். பணிக்கு 14 இடங்களும், ஐ.எஸ்.எஸ். பணிக்கு 32 இடங்களும் உள்ளன. பொருளாதாரம், அப்ளைடு எக்கனாமிக்ஸ், பிசினஸ் எக்கனாமிக்ஸ், எக்னாமெட்ரிக்ஸ் போன்ற முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் ஐ.இ.எஸ். பணிக்கும், புள்ளியியல், கணித புள்ளியியல், அப்ளைடு ஸ்டாட்டிஸ்டிக்ஸ் போன்ற இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் ஐ.எஸ்.எஸ். பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படும். 1-8-2018-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி, 16-4-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
புவி ஆராய்ச்சியாளர் பணிகள்
புவி ஆராய்ச்சியாளர் மற்றும் புவியியலாளர் பணிக்கான காலியிடங்களில் ஜியாலஜிஸ்ட் பணிக்கு 24 பேரும், ஜியோ பிசிக்ஸ்ட் பிரிவில் 17 பேரும், கெமிஸ்ட் 6 பேரும், ஜூனியர் 23 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவை தவிர ஹைட்ராலஜிஸ்ட் பணிக்கான காலியிடங்கள் பின்னர் வெளியாகும்.
ஜியாலஜிகல் சயின்ஸ், ஜியாலஜி, அப்ளைடு ஜியாலஜி, ஜியோ எக்ஸ்புளோரேசன், எம்.எஸ்சி. பிசிக்ஸ், அப்ளைடு பிசிக்ஸ், ஜியோ பிசிக்ஸ், அப்ளைடு ஜியோபிசிக்ஸ், எம்.எஸ்சி. கெமிஸ்ட்ரி, அப்ளைடு கெமிஸ்ட்ரி, அனலைடிகல் கெமிஸ்ட்ரி, ஹைட்ராலஜி போன்ற முதுநிலை படிப்புகளை படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. 21 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அந்தந்த பணிக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, கட்டண விவரம் உள்ளிட்டவற்றை இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 16-4-2018-ந் தேதியாகும்.
இவைகளுக்கான தேர்வு 29-6-2018-ந் தேதி நடைபெறு கிறது. இவை பற்றிய விரிவான விவரங்களை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.