வேலைவாய்ப்பு : அழைப்பு உங்களுக்குத்தான்!

இந்திய விஞ்ஞான ஆராய்ச்சி கவுன்சில் (சி.ஐ.எஸ்.ஆர்.) கீழ் செயல்படும் அமைப்புகளில் ஒன்று ‘சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் மைனிங் அண்ட் பியூயல் ரிசர்ச்’ (CIMFR) .

Update: 2018-03-27 05:01 GMT
ஆராய்ச்சி மையத்தில் வேலை

இந்திய விஞ்ஞான ஆராய்ச்சி கவுன்சில் (சி.ஐ.எஸ்.ஆர்.) கீழ் செயல்படும் அமைப்புகளில் ஒன்று ‘சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் மைனிங் அண்ட் பியூயல் ரிசர்ச்’ (CIMFR) . சுரங்கம் மற்றும் எரிபொருள் ஆராய்ச்சி மையமான இந்த அமைப்பில் தற்போது திட்ட உதவியாளர் (லெவல் 1,2) போன்ற பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 42 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பி.எஸ்சி., பி.எஸ்சி. (ஹான்ஸ்), பி.சி.ஏ., மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 28 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படும்.

நேரடி நேர்காணலின் அடிப்படையில் இந்த பணியிடங் கள் நிரப்பப்படுகிறது. http://www.pmeac.org/OnlineRegistration/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டு, தேவையான சான்றுகளுடன் நேர்காணலில் ஆஜராகலாம். வருகிற ஏப்ரல் 6,7-ந் தேதிகளில் இதற்கான நேர்காணல் நடக்கிறது. நேர்காணல் நடை பெறும் இடம், கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்களை http://www.cimfr.nic.in / என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

எய்ம்ஸ் மையத்தில் பணி

அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக எய்ம்ஸ் எனப்படுகிறது. தற்போது போபால் நகரில் செயல்படும் எய்ம்ஸ் மைய கிளையில் டியூட்டர் / டெமான்ஸ்ட்ரேட்டர் பணிக்கு 43 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். நேரடி நேர் காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. அனடாமி, பார்மகாலஜி, பிசியாலஜி, பாரன்சிக் மெடிசின், டாக்சிகாலஜி, பயோகெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, பேதாலஜி, லேப் மெடிசின் பிரிவில் பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்புடன், ஓராண்டு இன்டன்சிப் பயிற்சி பெற்றவர்கள் மருத்துவ பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பயோகெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி போன்ற முதுநிலை படிப்பு படித்தவர்கள் மருத்துவம் சாராத பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பதாரர்கள் ரூ.1000 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பின்னர் தேவையான சான்றுகளுடன் ஏப்ரல் 5,6-ந் தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். இவை பற்றிய விவரங்களை www.aiimsbhopal.edu.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

சட்டம் படித்தவர்களுக்கு வேலை

சட்டப்படிப்பு படித்து ‘கிளாட்’ தேர்வு எழுதுபவர்களுக்கு மத்திய அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஓ.என்.ஜி.சி. எனப்படும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் அசிஸ்டன்ட் லீகல் அட்வைசர் பணிக்கு 15 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 30 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள், கிளாட் 2018 தேர்வுக்கு விண்ணப்பித்த பதிவெண்ணுடன் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும். கிளாட் தேர்வில் பெறும் மதிப்பெண் அட்டையுடன், இந்த பணிகளுக்கான நேர்காணலில் கலந்து கொள்ளலாம். கிளாட் தேர்வு மே மாதம் 13-ந் தேதி நடக்கிறது. இதற்கான நேர்காணல் வருகிற ஆகஸ்டு மாதத்தில் நடைபெற உள்ளது. இது பற்றிய விவரங்களை www.ongc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

இதேபோல பாரத மிகுமின் நிறுவனமான ‘பெல்’ நிறு வனத்திலும் கிளாட் தேர்வு அடிப்படையில் சட்ட அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மொத்தம் 12 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். விருப்பமுள்ள சட்டப்படிப்பு படித்த பட்டதாரிகள் 31-3-2018-ந்தேதிக்குள் கிளாட் தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டு, பெல் இணையதளம் சென்று இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 2-ந் தேதி முதல், மே 2-ந் தேதி வரை இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். இது பற்றிய விவரங்களை www.bhel.gov.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

மின்தொகுப்பு கழக நிறுவனமான பி.ஜி.சி.ஐ.எல். நிறு வனத்திலும் எக்சிகியூட்டிவ் டிரெயினி (சட்டம்) பணிக்கு 6 பேர் கிளாட் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படு கிறார்கள். இந்த பணிகளுக்கு 31-5-2018-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரத்தை www.pgcil.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

தாதுவள நிறுவனத்தில் வேலை

மத்திய தாதுவள ஆராய்ச்சி நிறுவனம் சுருக்கமாக எம்.இ.சி.எல். என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறு வனத்தில் எக்சிகியூட்டிவ் டிரெயினி (கெமிஸ்ட் ) பணிக்கு 10 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. கேட் 2017 தேர்வின் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப் படுகிறது. எம்.எஸ்சி. கெமிஸ்ட்ரி படித்து கேட் தேர்வு எழுதியவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 28 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு 9-4-2018-ந் தேதி ஆரம்பமாகிறது. 8-5-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விவரங்களை http://www.me-cl.gov.in / என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.

அரசு வக்கீல் பணி

யூ.பி.எஸ்.சி. அமைப்பு மத்திய அரசுத் துறையில் காலியாக உள்ள டிரான்ஸ்லேட்டர் மற்றும் சட்ட அதிகாரி, அரசு வக்கீல், ஸ்டோர் அதிகாரி, சீனியர் லெக்சரர் போன்ற பணிகளுக்கு 16 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணியிடங்கள் உள்ள பிரிவு சார்ந்த பட்டப்படிப்பு, முதுநிலை படிப்பு படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரங்களை www.upsc.gov.in என்ற இணையதளத்தைப் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 30-3-2018-ந் தேதியாகும்.

பி.ஜி.சி.ஐ.எல். மத்திய மின்தொகுப்பு கழக நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் டிரெயினி (எச்.ஆர். பணிக்கு 25 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எம்.பி.ஏ. (எச்.ஆர், பெர்னல் மேனேஜ்மென்ட், இண்டஸ்ட்ரியல் ரிலேசன்ஸ், சோசியல் ஒர்க் ) போன்ற பிரிவில் முதுநிலை படிப்புடன், டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நெட் தேர்வின் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் விரிவான விவரங்களை www.powergridindia.com என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். நெட் தேர்வுக்கு விண்ணப்பித்த பின்பு இதற்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கான விண்ணப்பகாலம் ஜூலை மாதம் தொடங்குகிறது.

மேலும் செய்திகள்