தம்பதி உள்பட 4 பேர் தீக்குளிக்க முயற்சி
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி உள்பட 4 பேர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் நேற்று 500-க்கும் மேற்பட்டவர்கள் புகார் மனுக்கள் கொடுத்தனர். கலெக்டரிடம் முறையிட செல்லும் பொதுமக்கள், நுழைவு வாயில் பகுதியில் போலீசாரின் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று கோட்டைப்புதூர் பாக்குக்காரர் தோட்டம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சீனிவாசன் என்பவர் தனது மனைவி ரங்கநாயகி, மகள் தீபிகா(வயது 13), மகன் இளையபெருமாள்(11) ஆகியோருடன் வந்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் வந்தபோது, திடீரென்று சீனிவாசன் பையில் தயாராக கொண்டு வந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சேலம் டவுன் போலீசார் சீனிவாசன் கையில் வைத்திருந்த பாட்டிலை பறித்தனர். பின்னர் அவர் மீது ஒரு குடம் தண்ணீரை ஊற்றினர்.
தகவல் அறிந்து கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) விஜய்பாபு மற்றும் அதிகாரிகள் சீனிவாசனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில்,“நான் டிபன் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறேன். காலி மனை ஒன்றில் வங்கியில் மனைவி பெயரில் கடன் பெற்று 2015-ம் ஆண்டு டிசம்பர் முதல் மாதந்தோறும் தவணை செலுத்தி வருகிறேன். டிபன் கடை சரிவர ஓடாததால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தவணை செலுத்த முடியவில்லை.
இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி வங்கியில் இருந்து வந்த சிலர், எங்கள் வீட்டை ஜப்தி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இல்லையென்றால் நடப்பதே வேறு என்று மிரட்டினர். ஏழ்மை நிலையில் உள்ள எங்களுக்கு, தயவு கூர்ந்து வங்கி கடனை தள்ளுபடி செய்து மானிய கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றார்.
இதுபோல நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு கெங்கவல்லி அருகே உள்ள கடம்பூர் பூ கிணறு தெருவை சேர்ந்த சண்முகம்(42), அவரது மனைவி லலிதா(37) ஆகியோர் சேலம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதிக்கு வந்தனர். அவர்கள் திடீரென்று கேனில் கொண்டு வந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். போலீசார் தடுத்து காப்பாற்றியதோடு, தண்ணீர் ஊற்றி அவர்களை குளிப்பாட்டினர்.
கலெக்டரிடம் அவர்கள் கொடுக்க வைத்திருந்த மனுவில்,“நாங்கள் கிரயம் செய்த நிலத்தை கேட்டு ஏற்கனவே எங்களிடம் விற்ற பெண் மற்றும் குடும்பத்தினர் மிரட்டி அபகரிக்க நினைக்கிறார்கள். கெங்கவல்லி போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால் வீட்டை பாதுகாத்து, எங்கள் உயிருக்கும் ஆபத்து இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்“ என கூறப்பட்டுள்ளது.
கெங்கவல்லி அருகே உள்ள கவர்பனை என்ற கிராமத்தை சேர்ந்த சிவசாமி என்பவரும் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு மண் எண்ணெய் பாட்டிலுடன் வந்து தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவரை போலீசார் தடுத்து விசாரித்ததில்,“பின்னனூர் கிராமத்தில் தரிசு நிலம் உள்ளது. அந்த நிலத்திற்கு செல்லும் பாதையை, கவர்பனை கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் ஆக்கிரமித்து இடையூறு செய்வதுடன் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். எனவே, அத்தம்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றார்.