பக்கநாட்டில் 1,836 பயனாளிகளுக்கு ரூ.19 கோடியில் நலத்திட்ட உதவிகள்
எடப்பாடி அருகே பக்கநாட்டில் இன்று 1,836 பயனாளிகளுக்கு ரூ.19 கோடியில் நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.
எடப்பாடி,
எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பக்கநாடு பகுதியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் நடக்கிறது. இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, 3 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களை தொடங்கி வைத்து, புதிய கட்டிடங்களை திறந்து வைக்கிறார். மேலும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்குகிறார். இந்த விழாவில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல்வாழ்வுத்துறையின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் பக்கநாடு, சமுத்திரம் மற்றும் குன்னூர் ஆகிய 3 பகுதிகளில் தலா ரூ.60 லட்சம் மதிப்பில் மொத்தம் ரூ1.80 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் இந்த விழாவில் திறந்து வைக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல்வாழ்வுத்துறையின் சார்பில் ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் மேட்டூர் தாலுகா வனவாசி அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடத்தையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் நங்கவள்ளி, சங்ககிரி மற்றும் காடையாம்பட்டி ஆகிய 3 பகுதிகளில் ரூ.54.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள ஒரு கூடுதல் வகுப்பறை கட்டிடம், 2 கிராம சேவை மைய கட்டிடங்கள், ஒரு புதிய அங்கன்வாடி கட்டிடம் என 4 புதிய கட்டிடங்களையும் என மொத்தம் ரூ.98.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 5 புதிய கட்டிடங்களை திறந்து வைக்கிறார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் எடப்பாடி, கொங்கணாபுரம், நங்கவள்ளி, எடப்பாடி ஆகிய பகுதிகளில் ரூ.1.11 கோடி மதிப்பீட்டில் 17 புதிய திட்டப்பணிகள் மற்றும் சேலம் மாநகராட்சியின் சார்பில் ரூ.7.31 கோடி மதிப்பீட்டில் 9 புதிய திட்டப்பணிகள் என மொத்தம் ரூ.8.42 கோடி மதிப்பீட்டில் 26 புதிய திட்டப்பணிகளுக்கு இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் 1,836 பயனாளிகளுக்கு ரூ.19 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்குகிறார். பின்னர் எடப்பாடி சுற்றுலா ஆய்வு மாளிகையில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெற உள்ளார். இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் ரோகிணி மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.