கல்லூரி படிப்பு முடித்தவர்கள் வேலையில்லாமல் இருக்கக்கூடாது கலெக்டர் பேச்சு
கல்லூரி படிப்பு முடித்தவர்கள் வேலையில்லாமல் இருக்கக்கூடாது என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கூறினார்.
திருவண்ணாமலை,
இந்திய ரெயில்வே துறையில் உள்ள காலி பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு நடைபெற உள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 31-ந் தேதி (சனிக்கிழமை) கடைசி நாளாகும். இந்த தேர்வு 2 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்ட தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு திருவண்ணாமலை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் நேற்று தொடங்கியது. தொடக்க விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
போட்டி தேர்வுகளில் பங்கேற்க உள்ளவர்கள் கடின முயற்சிக்கு முக்கியத்துவம் செலுத்த வேண்டும். அதற்கான திறனை நாம் வளர்த்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதர்களுக்கும் வாழ்வில் முன்னேற்றம் அடைவதற்கு ஒரு நேரம் வரும். அந்த நேரம் யாருக்கு எப்போது வரும் என்று தெரியாது. ஆனால் அது வரும் போது அதனை நாம் தக்க வைத்து கொள்ள வேண்டும். கல்லூரி படிப்பு முடித்துவிட்ட பிறகு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டோம். இன்னும் வேலை கிடைக்கவில்லையே என்று யாரும் எண்ணக்கூடாது.
தற்போது அரசு மட்டுமின்றி தனியார் நிறுவனங்கள் வேலை வாய்ப்பிற்கு ஆட்கள் எடுக்கும் போது போட்டி தேர்வு வைத்து தான் தேர்வு செய்கின்றனர். இது போட்டிகள் நிறைந்த காலம். திறமை உள்ளவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கும் காலம் இது.
போட்டி தேர்வுகளில் கலந்துகொள்ள உள்ளவர்கள் அதற்கான பாட புத்தகத்தினை மட்டும் படிக்காமல், செய்தித்தாள்களை படித்து உள்ளூர் மட்டுமின்றி உலகளவிலான தகவல்களையும் அறிந்து கொள்ள வேண்டும். கல்லூரி படிப்பு முடித்தவர்கள் வேலையில்லாமல் ‘சும்மா’ இருக்கக்கூடாது. அரசு வேலை கிடைக்கும் வரை ஏதாவது ஒரு வேலையை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் விஜயா முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் பாரதி, அரிகிருஷ்ணன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். முடிவில் இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.