புதுச்சேரி சட்டசபையில் ரூ.2,466 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்: முதல்-அமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார்
புதுச்சேரி சட்டசபையில் நேற்று ரூ.2,466 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்டை முதல்-அமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார்.
புதுச்சேரி,
புதுவை சட்டசபை கூட்டம் நேற்று நடந்தது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் கிரண்பெடி உரையாற்றினார்.
அதைத்தொடர்ந்து இடைக்கால பட்ஜெட்டை முதல்-அமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார். அடுத்து வரும் 4 மாதங்களுக்கு (ஏப்ரல், மே, ஜூன், ஜூலை) அரசின் செலவினங்களுக்கு ரூ.2,466 கோடியே 66 லட்சத்து 67 ஆயிரத்துக்கு ஒப்புதல் கேட்டு இந்த இடைக்கால பட்ஜெட்டை முதல்-அமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார்.
அப்போது எழுந்து பேசிய அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன், மத்திய அரசு தனது பட்ஜெட்டில் புதுவைக்கான நிதியை ஒதுக்கிவிட்டது. அதனுடன் நமது மாநில வருவாயையும் சேர்த்து முழு பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டியதுதானே? இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த ரங்கசாமியை குறைகூறிய நீங்கள் தொடர்ந்து இதேபோல் ஏன் செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்து பேசிய முதல்-அமைச்சர் நாராயணசாமி, நாம் மத்திய அரசின் நேரடி பார்வையில் உள்ளதால் பட்ஜெட் போடும்போது மத்திய நிதி அமைச்சகம், உள்துறை, ஜனாதிபதியின் ஒப்புதல் பெறவேண்டும். ஏப்ரல் மாதம் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வோம் என்று குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து இடைக்கால பட்ஜெட்டை குரல் வாக்கெடுப்புக்குவிட்ட சபாநாயகர் வைத்திலிங்கம் பட்ஜெட் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.